• Jun 04 2026

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! சஜித் அறைகூவல்

dorin / Jun 3rd 2026, 9:14 pm
image

பண்டைய காலம் தொட்டுப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நமது முன்னோர்கள் நாட்டைப் பாதுகாத்தது போல், தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் போதும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கங்காராம விகாரையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,

"வரலாறு நெடுகிலும், பண்டைய காலம் தொட்டுப் பல்வேறு சவால்கள் நாட்டிற்கு வந்த தருணங்களிலெல்லாம் அன்றைய அரசர்களும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து நாட்டைப் பாதுகாத்தனர்.

ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்து, இறையாண்மை மிக்க நாடாகச் செயற்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அந்த இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயலாற்ற வேண்டும். இதன் பொருட்டுச் சகலரும் எவ்வித பேதமுமின்றி கைகோர்த்து இந்நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

புத்த தர்மத்தின் உயர்வுக்காகவும் அதன் நிலைபேற்றுத் தன்மைக்காகவும் முன்னெடுக்கப்படும் சமயச் செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக அமைந்துள்ளன. மறைந்த கலபொல ஞானேஸ்வர தேரர் உன்னதமான, கடினமான பாதையில் பயணித்து இந்தக் கங்காராம விகாரையை ஆன்மீக ரீதியாகவும் பௌதிக ரீதியாகவும் அபிவிருத்தி செய்தார். தற்போது அஸ்ஸஜி நாயக தேரரின் வழிகாட்டலின் கீழ் அந்தப் பணிகள் மிகச் சிறப்பாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்த உன்னத வெசாக் போயா தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில், புத்த பெருமானின் மும்மங்கள நிகழ்வுகளை நெஞ்சில் நிறுத்தி, நன்மைகளை நிலைநாட்டுவதற்கும் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதைப் போலவே நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் என்பவற்றையும் எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." - என்றார்

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் சஜித் அறைகூவல் பண்டைய காலம் தொட்டுப் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நமது முன்னோர்கள் நாட்டைப் பாதுகாத்தது போல், தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் போதும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.கொழும்பு, கங்காராம விகாரையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,"வரலாறு நெடுகிலும், பண்டைய காலம் தொட்டுப் பல்வேறு சவால்கள் நாட்டிற்கு வந்த தருணங்களிலெல்லாம் அன்றைய அரசர்களும் அமைச்சர்களும் ஒன்றிணைந்து நாட்டைப் பாதுகாத்தனர். ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாத்து, இறையாண்மை மிக்க நாடாகச் செயற்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அந்த இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயலாற்ற வேண்டும். இதன் பொருட்டுச் சகலரும் எவ்வித பேதமுமின்றி கைகோர்த்து இந்நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.புத்த தர்மத்தின் உயர்வுக்காகவும் அதன் நிலைபேற்றுத் தன்மைக்காகவும் முன்னெடுக்கப்படும் சமயச் செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக அமைந்துள்ளன. மறைந்த கலபொல ஞானேஸ்வர தேரர் உன்னதமான, கடினமான பாதையில் பயணித்து இந்தக் கங்காராம விகாரையை ஆன்மீக ரீதியாகவும் பௌதிக ரீதியாகவும் அபிவிருத்தி செய்தார். தற்போது அஸ்ஸஜி நாயக தேரரின் வழிகாட்டலின் கீழ் அந்தப் பணிகள் மிகச் சிறப்பாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எனவே, இந்த உன்னத வெசாக் போயா தினத்தைக் கொண்டாடும் அதேவேளையில், புத்த பெருமானின் மும்மங்கள நிகழ்வுகளை நெஞ்சில் நிறுத்தி, நன்மைகளை நிலைநாட்டுவதற்கும் சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதைப் போலவே நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் என்பவற்றையும் எவ்வித சமரசமுமின்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." - என்றார்

Advertisement

Advertisement

Advertisement