ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டைத் தாண்டி எல்லோரும் இணைந்து சரியான கல்வி சீர்திருத்தத்த கொண்டு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூவ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி மறுசீரமைப்பில் எழுந்த பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதும் அந்தப் பிழைகளை திருத்த முடியாத நிலையில் தான் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இன்றைய விவாத்தில் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிப் பேசுது தான் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பில் எழுந்த பிரச்சினைக்கு எதிர்க்கட்சி தான் பிரதான காரணம்.
எதிர்க்கட்சியின் காரணமாகத் தான் இதனைப் பிற்போட்டுள்ளார்கள். அல்லது எதிர்க்கட்சியால் தான் இந்தப்பிரச்சினை உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றித் தான் பேசுகின்றீர்கள்.
அதற்கான தீர்வை அல்லது பிழையை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கூட இன்னும் அவர்களுக்கு வரவில்லை.
இந்த விடயத்தை அரசு உள்வாங்க வேண்டும். இதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூடுதலாக பேசுகின்றார்கள். எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்ற நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்பார்ப்பை ஏன் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் நோக்கம் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை யார் பார்க்க இருக்கின்றார்கள்.
எப்போது கொண்டு வரப்போகின்றீர்கள், எப்படிக் கொண்டு வரப்போகின்றீர்கள், உடனே கொண்டு வாருங்கள் என்ற அக்கறையைப் பார்த்தால் இன்று அரசாங்கத்திற்குள்ளே இரண்டு பிளவுகள் பிரிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது.
கல்வி சீர்திருத்தத்தில் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும். பல குறைபாடுகள் காணப்புடுகின்றன. கல்வியில் புலமை வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுடன் பேசவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களிடையே இதைப் பற்றி விவாதிக்கவில்லை.
அடிப்படை விடயங்களை நிவர்த்தி செய்யாமல் புதிய விடயங்கள் கொண்டு வருவதை எவ்வாறு மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆகவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டைத் தாண்டி எல்லோரும் இணைந்து சரியான கல்வி சீர்திருத்தத்த கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டைத் தாண்டி எல்லோரும் இணைந்து சரியான கல்வி சீர்திருத்தத்த கொண்டு வரவேண்டும் - இம்ரான் மக்ரூவ் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டைத் தாண்டி எல்லோரும் இணைந்து சரியான கல்வி சீர்திருத்தத்த கொண்டு வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மக்ரூவ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி மறுசீரமைப்பில் எழுந்த பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதும் அந்தப் பிழைகளை திருத்த முடியாத நிலையில் தான் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இன்றைய விவாத்தில் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிப் பேசுது தான் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. கல்வி மறுசீரமைப்பில் எழுந்த பிரச்சினைக்கு எதிர்க்கட்சி தான் பிரதான காரணம். எதிர்க்கட்சியின் காரணமாகத் தான் இதனைப் பிற்போட்டுள்ளார்கள். அல்லது எதிர்க்கட்சியால் தான் இந்தப்பிரச்சினை உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றித் தான் பேசுகின்றீர்கள். அதற்கான தீர்வை அல்லது பிழையை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கூட இன்னும் அவர்களுக்கு வரவில்லை. இந்த விடயத்தை அரசு உள்வாங்க வேண்டும். இதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூடுதலாக பேசுகின்றார்கள். எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்ற நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்பார்ப்பை ஏன் அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் நோக்கம் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை யார் பார்க்க இருக்கின்றார்கள். எப்போது கொண்டு வரப்போகின்றீர்கள், எப்படிக் கொண்டு வரப்போகின்றீர்கள், உடனே கொண்டு வாருங்கள் என்ற அக்கறையைப் பார்த்தால் இன்று அரசாங்கத்திற்குள்ளே இரண்டு பிளவுகள் பிரிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது. கல்வி சீர்திருத்தத்தில் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும். பல குறைபாடுகள் காணப்புடுகின்றன. கல்வியில் புலமை வாய்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுடன் பேசவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களிடையே இதைப் பற்றி விவாதிக்கவில்லை. அடிப்படை விடயங்களை நிவர்த்தி செய்யாமல் புதிய விடயங்கள் கொண்டு வருவதை எவ்வாறு மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.ஆகவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டைத் தாண்டி எல்லோரும் இணைந்து சரியான கல்வி சீர்திருத்தத்த கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.