அரசியலில் தான் செய்த ஊழல்களை மறைப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செயற்பட்டு வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்புப் பேரவையில் சிறீதரன் பணியாற்றுகின்றார். பாராளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சியை சார்ந்து தான் அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் சிறீதரன் என்ன செய்திருக்கின்றார். 8 முறை அரசியலமைப்புப் பேரவையில் தெரிவுசெய்யப்பட்ட தவறான நியமனங்களுக்கு கை உயர்த்தி அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார்.
மௌனம் சாதித்திருக்கின்றார். இடமளித்திருக்கின்றார். இது தொடர்பான பெரிய பிரச்சினை இருக்கின்றது. இலஞ்ச ஊழல் ஆணையாளரை நியமிக்கின்ற போது இவர் கையை விழுத்தினார். அக்கறைகளில் முரண்பாடுகள் இருக்கும்போது அதை வெளிப்படுத்த வேண்டும்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குறிப்பாக பூநகரி வாவியில் 150 ஏக்கர் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்டமை தொடர்பான ஒரு விடயத்தில் சித்தார்த்தனுடைய வங்கிக்கணக்கு வந்துள்ளது. 30 மில்லியன் சிறீதரன் சிறீரங்கன் அவர்களுக்கு வந்துள்ளது.
இந்தப் பணத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி அரசியலமைப்புப் பேரவையிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் சிறிய கட்சிகளில் இருந்து பிரதிநிதியாக சென்று அரசாங்கத்துடன் இணைந்து கைகோர்த்துக் கொண்டு செயற்படுவதற்கல்ல நாங்கள் அவர்களை அனுப்பியிருக்கின்றோம்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சென்று இப்போது அரசாங்கத்திற்கு கூஜாதூக்குகின்றார். அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஊழல்களை மறைக்க அரசுக்கு ஆதரவாக செயற்படும் சிறீதரன்; சபையில் சுட்டிக்காட்டிய தயாசிறி ஜயசேகர அரசியலில் தான் செய்த ஊழல்களை மறைப்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செயற்பட்டு வருகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்புப் பேரவையில் சிறீதரன் பணியாற்றுகின்றார். பாராளுமன்றத்தில் இருக்கின்ற எதிர்க்கட்சியை சார்ந்து தான் அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் சிறீதரன் என்ன செய்திருக்கின்றார். 8 முறை அரசியலமைப்புப் பேரவையில் தெரிவுசெய்யப்பட்ட தவறான நியமனங்களுக்கு கை உயர்த்தி அங்கீகாரம் வழங்கியிருக்கின்றார். மௌனம் சாதித்திருக்கின்றார். இடமளித்திருக்கின்றார். இது தொடர்பான பெரிய பிரச்சினை இருக்கின்றது. இலஞ்ச ஊழல் ஆணையாளரை நியமிக்கின்ற போது இவர் கையை விழுத்தினார். அக்கறைகளில் முரண்பாடுகள் இருக்கும்போது அதை வெளிப்படுத்த வேண்டும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குறிப்பாக பூநகரி வாவியில் 150 ஏக்கர் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்டமை தொடர்பான ஒரு விடயத்தில் சித்தார்த்தனுடைய வங்கிக்கணக்கு வந்துள்ளது. 30 மில்லியன் சிறீதரன் சிறீரங்கன் அவர்களுக்கு வந்துள்ளது.இந்தப் பணத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதேநேரத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி அரசியலமைப்புப் பேரவையிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சிறிய கட்சிகளில் இருந்து பிரதிநிதியாக சென்று அரசாங்கத்துடன் இணைந்து கைகோர்த்துக் கொண்டு செயற்படுவதற்கல்ல நாங்கள் அவர்களை அனுப்பியிருக்கின்றோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சென்று இப்போது அரசாங்கத்திற்கு கூஜாதூக்குகின்றார். அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.