• Jan 23 2026

அமெரிக்கா விசா சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்- அமெரிக்க தூதரகம்!

dileesiya / Jan 22nd 2026, 5:02 pm
image

அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

 

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது. 

 

இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. 


இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை. 

 

அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 

சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். 


இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். 

 

வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா விசா சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்- அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளிக்கிறது.  இது ஒரு சுற்றுலா மற்றும் குறுகிய கால வணிக விஜயத்திற்கான விசா மட்டுமே என்பதை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் எந்தவொரு வேலையிலும் ஈடுபட அனுமதி இல்லை.  அனுமதியின்றி வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோதப் பணியில் ஈடுபடுவோர் உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள். இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடுவோர், எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இலங்கையர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போது, தமது விசாவின் வகையையும் அதன் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்.  வேலை தேடுபவர்கள் அல்லது பணியில் ஈடுபட விரும்புபவர்கள் அதற்குரிய முறையான பணி விசாவை பெற்றிருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement