திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு தேரர்களையும் விடுவிக்கக் கோரியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை வலுவற்றதாக்கக் கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட தரப்பினரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டது.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: தேரர்களின் மனுக்கள் மீதான தீர்ப்பு தொடர்பான அறிவிப்பு திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரு தேரர்களையும் விடுவிக்கக் கோரியும், அவர்களுக்கு வழங்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை வலுவற்றதாக்கக் கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. சம்பந்தப்பட்ட தரப்பினரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இந்த மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அறிவிப்பதாக உத்தரவிட்டது.