கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக நீங்கள் எவ்வளவு விமர்சனங்களை உருவாக்கினாலும் இதற்கு எதிராக சேறுபூசல்களை கொண்டு வந்தாலும் எமது பிரதமரை இழிவுபவடுத்தினாலும் நாங்கள் கைவிடப்போவதில்லை என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரம் 6 மொடியுலை வைத்து பிரதமரை கேலி செய்கிறீர்கள். கல்வி மறுசீரமைப்பு வேண்டும் என சொல்லிவிட்டு வெளியே சென்று தூற்றுகிறார்கள்.
பதாதைகளை தூக்கி ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். மாணவர்கள் பார்க்கக்கூடாத ஆபாச வார்த்தைகளை ஏந்தி போராட்டம் செய்கிறார்கள்.
நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள். கோப்புக்களில் ஒழித்து வைப்பதில் அர்த்தமில்லை. கல்வி மறுசீரமைப்பு ஊடாக நாட்டை ஆபாசமாக்கவும் ஓரினச்சேர்க்கையை மேற்கொள்வதும் தான் இவர்களது விவாதம்.
பிரதமருக்கு எதிராக இவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டார்கள் . ஆனால் இவர்களுக்கு எதிராக இன்று பல மக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கின்றார்கள்.
மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு எதிராக இவர்கள் போராடினார்கள். பிக்குமார்கள் கதிரைகளில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு மேல் கதிரைகள் போட்டு அமர்ந்திருந்தவர்கள் இன்று எமக்கு வந்து சமயத்தைப் போதிக்க வருகின்றார்கள்.
இந்த மொடியுலால் சமயம் அழிக்கப்படுவதாகவும் கலாச்சாரம் அழித்தொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். யார் இவர்கள். கட்டுநாயக்கவில் ஒரு சேவையாளரை அழைத்து வந்து அலரிமாளிகையில் வைத்துக்கொண்டு இந்த நாட்டு மக்களின் வரித்தொகையில் இலட்சக்கணக்கில் சம்பளத்தை செலுத்தி வந்தவர்கள் ஆபாசம் தொடர்பில் எமக்கு கற்பிக்கின்றார்கள்.
கல்வி மறுசீரமைப்பை நல்லதோர் எண்ணத்தோடு கொண்டுவந்துள்ளோம். புதியதோர் உலகை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் செயற்படுவோம்.
நீங்கள் எவ்வளவு விமர்சனங்களை உருவாக்கினாலும் இதற்கு எதிராக சேறுபூசல்களை கொண்டு வந்தாலும் எமது பிரதமரை இழிவுபவடுத்தினாலும் நாங்கள் கைவிடப்போவதில்லை.
பிரதமர் அஞ்சாநெஞ்சம் படைத்தவராக அனைத்து அவமானங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த திடகாத்திரமான பெண்ணாகக் காணப்படுகின்றார்.
பெண்களுக்கு அவமதிப்பதாக இவர்கள் இங்கு கூச்சலிடுகின்றார்கள். ஆனால் ஒரு பெண்ணான பிரதமருக்கு இவர்கள் கூறும் கருத்துக்களைப் பாருங்கள் என சபையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
பிரதமரை இழிவுபடுத்தினாலும் கல்வி மறுசீரமைப்பை கைவிடோம்; மஹிந்த ஜயசிங்க சபையில் போர்க்கொடி கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக நீங்கள் எவ்வளவு விமர்சனங்களை உருவாக்கினாலும் இதற்கு எதிராக சேறுபூசல்களை கொண்டு வந்தாலும் எமது பிரதமரை இழிவுபவடுத்தினாலும் நாங்கள் கைவிடப்போவதில்லை என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற கல்வி மறுசீரமைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர்இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் 6 மொடியுலை வைத்து பிரதமரை கேலி செய்கிறீர்கள். கல்வி மறுசீரமைப்பு வேண்டும் என சொல்லிவிட்டு வெளியே சென்று தூற்றுகிறார்கள். பதாதைகளை தூக்கி ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள். மாணவர்கள் பார்க்கக்கூடாத ஆபாச வார்த்தைகளை ஏந்தி போராட்டம் செய்கிறார்கள். நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள். கோப்புக்களில் ஒழித்து வைப்பதில் அர்த்தமில்லை. கல்வி மறுசீரமைப்பு ஊடாக நாட்டை ஆபாசமாக்கவும் ஓரினச்சேர்க்கையை மேற்கொள்வதும் தான் இவர்களது விவாதம். பிரதமருக்கு எதிராக இவர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டார்கள் . ஆனால் இவர்களுக்கு எதிராக இன்று பல மக்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கின்றார்கள். மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கு எதிராக இவர்கள் போராடினார்கள். பிக்குமார்கள் கதிரைகளில் அமர்ந்திருந்த போது அவர்களுக்கு மேல் கதிரைகள் போட்டு அமர்ந்திருந்தவர்கள் இன்று எமக்கு வந்து சமயத்தைப் போதிக்க வருகின்றார்கள். இந்த மொடியுலால் சமயம் அழிக்கப்படுவதாகவும் கலாச்சாரம் அழித்தொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். யார் இவர்கள். கட்டுநாயக்கவில் ஒரு சேவையாளரை அழைத்து வந்து அலரிமாளிகையில் வைத்துக்கொண்டு இந்த நாட்டு மக்களின் வரித்தொகையில் இலட்சக்கணக்கில் சம்பளத்தை செலுத்தி வந்தவர்கள் ஆபாசம் தொடர்பில் எமக்கு கற்பிக்கின்றார்கள். கல்வி மறுசீரமைப்பை நல்லதோர் எண்ணத்தோடு கொண்டுவந்துள்ளோம். புதியதோர் உலகை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் செயற்படுவோம். நீங்கள் எவ்வளவு விமர்சனங்களை உருவாக்கினாலும் இதற்கு எதிராக சேறுபூசல்களை கொண்டு வந்தாலும் எமது பிரதமரை இழிவுபவடுத்தினாலும் நாங்கள் கைவிடப்போவதில்லை. பிரதமர் அஞ்சாநெஞ்சம் படைத்தவராக அனைத்து அவமானங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த திடகாத்திரமான பெண்ணாகக் காணப்படுகின்றார். பெண்களுக்கு அவமதிப்பதாக இவர்கள் இங்கு கூச்சலிடுகின்றார்கள். ஆனால் ஒரு பெண்ணான பிரதமருக்கு இவர்கள் கூறும் கருத்துக்களைப் பாருங்கள் என சபையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.