இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கான தீர்மானத்தை சபையின் ஊடாக மேற்கொண்டு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூச தின உலகப் பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த திருவிழாவின் விரிவான ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இணுவில் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது குடிநீர், சுகாதாரம், வீதி தடைகள், வாகனப் பாதுகாப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறித்து கலந்துரையாடலில் மல்லாகம் நீதிமன்ற பதிவாளர், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ், கலாநிதி ஆறு திருமுருகன், பொலிஸார், ஆலய குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சத் திருவிழா தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை இணுவில் கந்தசுவாமி கோவில் உலகப் பெருமஞ்சத் திருவிழா, தேசிய நிகழ்வாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான தீர்மானத்தை சபையின் ஊடாக மேற்கொண்டு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூச தின உலகப் பெருமஞ்சத் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.குறித்த திருவிழாவின் விரிவான ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் இணுவில் அறிவாலயத்தில் நடைபெற்றது.இதன்போது குடிநீர், சுகாதாரம், வீதி தடைகள், வாகனப் பாதுகாப்பு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.குறித்து கலந்துரையாடலில் மல்லாகம் நீதிமன்ற பதிவாளர், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஷ், கலாநிதி ஆறு திருமுருகன், பொலிஸார், ஆலய குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.