வீதியில் திடீரென மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய கதிரன் ஐயாத்துரை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியில் வீதிக்குள் நுழைய முயற்சித்துள்ளார்.
இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அவர் அந்த இடத்தில் மயங்கிய நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (21) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மோட்டார் சைக்கிள் வீதியில் திடீரென வந்ததால் நிலை குலைந்து விழுந்த முதியவர் பலி வீதியில் திடீரென மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைகுலைந்து கீழே விழுந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிழக்கு, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 73 வயதுடைய கதிரன் ஐயாத்துரை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் கடந்த 19ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு, துவிச்சக்கர வண்டியில் வீதிக்குள் நுழைய முயற்சித்துள்ளார்.இதன்போது காங்கேசன்துறை பக்கத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.அவர் அந்த இடத்தில் மயங்கிய நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (21) உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.