ஒரு சில முதலாளிகள் இலாபமீட்டவே அரசு அரிசியை இறக்குமதி செய்கின்றது என வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நெல்லுக்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ள போதிலும், மில் உரிமையாளர்கள் குறித்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வருவதில்லை. எனவே அரசு நெல்லினை கொள்வனவு செய்வதன் மூலமாகவே குறித்த நிர்ணய விலையினை சரியான முறையில் கடைப்பிடிக்க முடியும்.
ஆலை உரிமையாளர்களிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் ஐம்பது ரூபாய் குறைத்து கேட்கின்றார்கள். இதன் காரணமாக ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய ஆலை உரிமையாளர்கள் அறுவடை காலத்தில் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து சேமித்து வைத்துவிட்டு, சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்.
பொலனறுவை, அனுராதபுரத்தில் உள்ள பெரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை 350, 375 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் கொழும்பிலே கீரிசம்பா, வெள்ளை அரிசி, சம்பா அரிசி போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசினால் தெரிவிக்கப்படுவதுடன், மக்களின் தேவைக்காக அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
முன்னைய அரசு முறையற்ற முறையில் வெளிநாட்டில் இருந்து அரிசியினை இறக்குமதி செய்ததை போன்றே தற்போதும் காணப்படுகின்றது.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என தெரிவிக்கும் இவ் அரசானது விவசாயிகள் முன்னேறுவதற்கான வழியினை இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை.
தற்போதைய நிலையில் விவசாயத்தினை மேற்கொள்ள உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் வேலை செய்பவர்களின் பற்றாக்குறை என்பன காணப்படுகின்றது.
மேலும் வேலையாட்களுக்கு நாளொன்றுக்கு 3500 முதல் 4000 ரூபாய் வரை சம்பளம் வழங்க வேண்டிய நிலையும் காணப்படுகினறது. இதன் காரணமாக இலாபம் ஈட்ட முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் வடக்கு கிழக்கில் வாழும் விவசாயிகளின் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தினை செய்வதை தவிர்க்கின்றனர்.
அரசினால் நிர்ணயித்த விலையினை மீறி கீரி சம்பா அரிசியினை 380 ரூபாய்க்கு அலரியவினால் விற்பனை செய்வதனை அனுமதிப்பதற்கு என்ன தேவை அரசுக்கு இருக்கிறது என்பதை மக்களுக்கோ, நுகர்வோருக்கோ புரியவில்லை.
தற்போதைய ஜனாதிபதி நீதியான முறையில் செயற்பட்டுவரும் நிலையில், தற்போது அரிசி விடயத்தில் மாத்திரம் ஏன் நித்திரை கொள்கின்றார் என்று தெரியவில்லை.
இந்நிலை மாற வேண்டுமாயின் அரிசினால் வடக்கு கிழக்கிலே தற்போது வெட்டப்படும் நெல்லினை அரசு கொள்வனவு செய்ய வேண்டும்.
கடந்த வருடத்தில் சிறு போகத்தில் கனிசமான அளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இதனை அரிசியாக மாற்றுவதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அறிவிப்பு வழங்கப்பட்டதுடன் அதற்குரிய ஆவணங்களை குறித்த சபைக்கு வழங்கிய போதும், இதுவரை அந்த நெல்லினை குற்றி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக புதிய நெல்லினை தற்போது கொள்வனவு செய்து வைப்பதற்கான இட வசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏன் அரசு தூர நோக்காக சிந்திக்கவில்லை என்று தெரியவில்லை.
எமது நாட்டிற்கு அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு முன்பாக நாட்டில் எவ்வளவு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு எவ்வளவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு அதில் மக்கள் நுகர்வுக்கு எவ்வளவு தேவைப்படுகின்றது என்பது போக மிகுதி எவ்வளவு பற்றாக்குறையாக உள்ளது என்பதை கணக்கிடப்பட்டு இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக எமது பற்றாக்குறையை விட அதிகளவான அரிசியே இறக்குமதி செய்யப்படுகின்றது.
இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தையிலே 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு கின்றது. இதன் காரணமாக எங்கள் நாட்டு அரிசியினை 200 ரூபாய்க்கே நாம் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் 220 ரூபாய் வெள்ளைநாடு மற்றும் சிவப்பு நாட்டு அரிசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆட்டக்காரி அரிசிக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், கீரி சம்பாவிற்கான நிர்ணய விலையை நீக்கி விடவும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக நிர்ணய விலையை ஏற்படுத்தி ஒரு சில ஆலை உரிமையாளர்கள் மட்டும் விற்பனை செய்வதற்கு ஏதுவாக மேற்கொண்டது போல் இருக்கின்றது. இதன் மூலமாக இவர்களிற்கு வருமானம் கிடைக்கின்ற நிலையில், சிறு கைத்தொழில் செய்பவர்களும், சிறு ஆலை உரிமையாளர்களும் வியாபாரம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
வெள்ளநாடு மற்றும் சிவப்பு கோரா, வெள்ளை, சிவப்பு பச்சை அரிசியினை ஏழை மக்களால் உணவுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் கோரா அரிசியானது பணம் படைத்தவர்களும், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளிற்குமே பயன்படுத்தப்படுகின்றது. குறித்த ஒரு அரிசிக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அனைத்து அரிசிகளையும் இறக்குமதி செய்கின்றார்கள்.
இவ்வாறு இறக்குமதி செய்வது எனின் குறித்த அமைச்சர் ஏதோவொரு நன்மையினை அடைய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஒரு சில முதலாளிகள் இலாப மீட்ட இவ் அரசு உதவி செய்வது போல் உள்ளது.
மேலும் இலங்கையில் உள்ள மக்களை விட குறிப்பிட்டளவு இறக்குமதி தேவையில்லை. நாட்டிற்கு தேவையான அரிசி இறக்குமதியினை அரசே செய்ய வேண்டும். மாறாக தனியாரினை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் பட்சத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாகவே இறக்குமதி செய்வார்கள். இதனை தடுக்கவே முடியாது.
இதையே முன்பிருந்த அரசும் மேற்கொண்டது தற்போதைய அரசும் செய்கின்றது என மேலும் தெரிவித்தார்.
ஒரு சில முதலாளிகள் இலாபமீட்டவே அரசு அரிசியை இறக்குமதி செய்கின்றது -வவுனியா ஆலை உரிமையாளர் சங்க தலைவர் ஒரு சில முதலாளிகள் இலாபமீட்டவே அரசு அரிசியை இறக்குமதி செய்கின்றது என வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கம் நெல்லுக்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ள போதிலும், மில் உரிமையாளர்கள் குறித்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வருவதில்லை. எனவே அரசு நெல்லினை கொள்வனவு செய்வதன் மூலமாகவே குறித்த நிர்ணய விலையினை சரியான முறையில் கடைப்பிடிக்க முடியும்.ஆலை உரிமையாளர்களிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் ஐம்பது ரூபாய் குறைத்து கேட்கின்றார்கள். இதன் காரணமாக ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய ஆலை உரிமையாளர்கள் அறுவடை காலத்தில் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து சேமித்து வைத்துவிட்டு, சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்.பொலனறுவை, அனுராதபுரத்தில் உள்ள பெரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை 350, 375 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் கொழும்பிலே கீரிசம்பா, வெள்ளை அரிசி, சம்பா அரிசி போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசினால் தெரிவிக்கப்படுவதுடன், மக்களின் தேவைக்காக அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.முன்னைய அரசு முறையற்ற முறையில் வெளிநாட்டில் இருந்து அரிசியினை இறக்குமதி செய்ததை போன்றே தற்போதும் காணப்படுகின்றது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என தெரிவிக்கும் இவ் அரசானது விவசாயிகள் முன்னேறுவதற்கான வழியினை இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை.தற்போதைய நிலையில் விவசாயத்தினை மேற்கொள்ள உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் வேலை செய்பவர்களின் பற்றாக்குறை என்பன காணப்படுகின்றது.மேலும் வேலையாட்களுக்கு நாளொன்றுக்கு 3500 முதல் 4000 ரூபாய் வரை சம்பளம் வழங்க வேண்டிய நிலையும் காணப்படுகினறது. இதன் காரணமாக இலாபம் ஈட்ட முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் வடக்கு கிழக்கில் வாழும் விவசாயிகளின் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தினை செய்வதை தவிர்க்கின்றனர்.அரசினால் நிர்ணயித்த விலையினை மீறி கீரி சம்பா அரிசியினை 380 ரூபாய்க்கு அலரியவினால் விற்பனை செய்வதனை அனுமதிப்பதற்கு என்ன தேவை அரசுக்கு இருக்கிறது என்பதை மக்களுக்கோ, நுகர்வோருக்கோ புரியவில்லை. தற்போதைய ஜனாதிபதி நீதியான முறையில் செயற்பட்டுவரும் நிலையில், தற்போது அரிசி விடயத்தில் மாத்திரம் ஏன் நித்திரை கொள்கின்றார் என்று தெரியவில்லை. இந்நிலை மாற வேண்டுமாயின் அரிசினால் வடக்கு கிழக்கிலே தற்போது வெட்டப்படும் நெல்லினை அரசு கொள்வனவு செய்ய வேண்டும். கடந்த வருடத்தில் சிறு போகத்தில் கனிசமான அளவான நெல் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இதனை அரிசியாக மாற்றுவதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபையினால் அறிவிப்பு வழங்கப்பட்டதுடன் அதற்குரிய ஆவணங்களை குறித்த சபைக்கு வழங்கிய போதும், இதுவரை அந்த நெல்லினை குற்றி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புதிய நெல்லினை தற்போது கொள்வனவு செய்து வைப்பதற்கான இட வசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஏன் அரசு தூர நோக்காக சிந்திக்கவில்லை என்று தெரியவில்லை.எமது நாட்டிற்கு அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு முன்பாக நாட்டில் எவ்வளவு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு எவ்வளவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு அதில் மக்கள் நுகர்வுக்கு எவ்வளவு தேவைப்படுகின்றது என்பது போக மிகுதி எவ்வளவு பற்றாக்குறையாக உள்ளது என்பதை கணக்கிடப்பட்டு இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக எமது பற்றாக்குறையை விட அதிகளவான அரிசியே இறக்குமதி செய்யப்படுகின்றது.இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தையிலே 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு கின்றது. இதன் காரணமாக எங்கள் நாட்டு அரிசியினை 200 ரூபாய்க்கே நாம் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் 220 ரூபாய் வெள்ளைநாடு மற்றும் சிவப்பு நாட்டு அரிசிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆட்டக்காரி அரிசிக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால், கீரி சம்பாவிற்கான நிர்ணய விலையை நீக்கி விடவும் என்றும் தெரிவித்தார்.குறிப்பாக நிர்ணய விலையை ஏற்படுத்தி ஒரு சில ஆலை உரிமையாளர்கள் மட்டும் விற்பனை செய்வதற்கு ஏதுவாக மேற்கொண்டது போல் இருக்கின்றது. இதன் மூலமாக இவர்களிற்கு வருமானம் கிடைக்கின்ற நிலையில், சிறு கைத்தொழில் செய்பவர்களும், சிறு ஆலை உரிமையாளர்களும் வியாபாரம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.வெள்ளநாடு மற்றும் சிவப்பு கோரா, வெள்ளை, சிவப்பு பச்சை அரிசியினை ஏழை மக்களால் உணவுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் கோரா அரிசியானது பணம் படைத்தவர்களும், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளிற்குமே பயன்படுத்தப்படுகின்றது. குறித்த ஒரு அரிசிக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அனைத்து அரிசிகளையும் இறக்குமதி செய்கின்றார்கள்.இவ்வாறு இறக்குமதி செய்வது எனின் குறித்த அமைச்சர் ஏதோவொரு நன்மையினை அடைய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஒரு சில முதலாளிகள் இலாப மீட்ட இவ் அரசு உதவி செய்வது போல் உள்ளது. மேலும் இலங்கையில் உள்ள மக்களை விட குறிப்பிட்டளவு இறக்குமதி தேவையில்லை. நாட்டிற்கு தேவையான அரிசி இறக்குமதியினை அரசே செய்ய வேண்டும். மாறாக தனியாரினை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் பட்சத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாகவே இறக்குமதி செய்வார்கள். இதனை தடுக்கவே முடியாது.இதையே முன்பிருந்த அரசும் மேற்கொண்டது தற்போதைய அரசும் செய்கின்றது என மேலும் தெரிவித்தார்.