• Jan 23 2026

அர்ஜுன ரணதுங்க, அவரது சகோதரர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Chithra / Jan 22nd 2026, 8:23 pm
image

 

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதேவேளை, அதிக விலையில் ‘ஸ்பொட் டெண்டர்கள்’ மூலம் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததன் ஊடாக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே குறித்த இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அர்ஜுன ரணதுங்க, அவரது சகோதரர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்  முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.இதேவேளை, அதிக விலையில் ‘ஸ்பொட் டெண்டர்கள்’ மூலம் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ததன் ஊடாக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே குறித்த இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement