• Jan 23 2026

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு:மூவர் பலி!

dileesiya / Jan 22nd 2026, 4:36 pm
image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

நியூ சவுத் வேல்ஸின் லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த அவசர தகவலையடுத்து, பொலிஸார் மற்றும் அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 


 

அங்கு மர்ம நபர் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

சம்பவ இடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

துப்பாக்கிதாரி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி சிட்னியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அரசாங்கம் துப்பாக்கி உரிமங்களைக் கடுமையாக்கி, பொதுமக்களிடம் உள்ள துப்பாக்கிகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தது. 


 

இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு:மூவர் பலி அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையிலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நியூ சவுத் வேல்ஸின் லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த அவசர தகவலையடுத்து, பொலிஸார் மற்றும் அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  அங்கு மர்ம நபர் நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவ இடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  துப்பாக்கிதாரி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி சிட்னியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அரசாங்கம் துப்பாக்கி உரிமங்களைக் கடுமையாக்கி, பொதுமக்களிடம் உள்ள துப்பாக்கிகளைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தது.  இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement