ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை மாடு ஒன்று முட்டி வீசிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலங்களில் ஒன்று என்பதால் தினசரி தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (22) காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருக்கோயில் தெற்கு கோபுர வாசல் வழியாக சென்றுள்ளனர்.
அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா என்ற 62 வயது பெண் மீது வேகமாக மோதியதில் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் காயமடைந்த சீசாவை உடனடியாக அங்கிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது.
கேரள மாநில பெண்ணை முட்டிய காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
சாமி தரிசனத்திற்கு வந்த கேரள பெண்ணை முட்டி வீசிய மாடு ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தரை மாடு ஒன்று முட்டி வீசிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருத்தலங்களில் ஒன்று என்பதால் தினசரி தமிழக மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று (22) காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருக்கோயில் தெற்கு கோபுர வாசல் வழியாக சென்றுள்ளனர்.அப்போது சாலையில் வேகமாக ஓடி வந்த மாடு, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா என்ற 62 வயது பெண் மீது வேகமாக மோதியதில் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.இதில் காயமடைந்த சீசாவை உடனடியாக அங்கிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது. கேரள மாநில பெண்ணை முட்டிய காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.