• Jan 23 2026

வாடிக்கையாளர் போல் நடித்து தங்க நகை திருட்டு

Chithra / Jan 22nd 2026, 7:27 pm
image

 

ஹட்டன் நகர்பகுதியில், வாடிக்கையாளர் போன்று நடித்து நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம், ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள கடையொன்றில் நேற்று பிற்பகல் 2.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது, வாடிக்கையாளர் போன்று கடைக்குள் வந்த சந்தேக நபர், தங்க மாலைகளை பார்வையிட்டுள்ளார். 


அதன்பின்னர்,  2,85,000 ரூபா  பெறுமதியான நகையொன்றினை தெரிவு செய்து அதற்கான பற்றுச்சீட்டினை எழுதி பெற்றுக்கொடுக்க முற்படும் போது தங்கை நகையை எடுத்துகொண்டு ஓடியுள்ளார்.


சம்பவம் நடந்த போது கடையின் உரிமையாளர் வெளியில் சென்றுள்ளார். கடையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் மாத்திரம் இருந்துள்ளனர்.


இவை அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    

வாடிக்கையாளர் போல் நடித்து தங்க நகை திருட்டு  ஹட்டன் நகர்பகுதியில், வாடிக்கையாளர் போன்று நடித்து நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம், ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள கடையொன்றில் நேற்று பிற்பகல் 2.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இதன்போது, வாடிக்கையாளர் போன்று கடைக்குள் வந்த சந்தேக நபர், தங்க மாலைகளை பார்வையிட்டுள்ளார். அதன்பின்னர்,  2,85,000 ரூபா  பெறுமதியான நகையொன்றினை தெரிவு செய்து அதற்கான பற்றுச்சீட்டினை எழுதி பெற்றுக்கொடுக்க முற்படும் போது தங்கை நகையை எடுத்துகொண்டு ஓடியுள்ளார்.சம்பவம் நடந்த போது கடையின் உரிமையாளர் வெளியில் சென்றுள்ளார். கடையில் பணிபுரியும் இரண்டு பெண்கள் மாத்திரம் இருந்துள்ளனர்.இவை அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    

Advertisement

Advertisement

Advertisement