• Jan 23 2026

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல! பிரதமர் ஹரிணி

Chithra / Jan 22nd 2026, 9:58 pm
image

 

தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி உலகப் பெண் மாளிகையில் நடைபெற்ற 'World Woman Davos Agenda 2026' நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அது பாலின அடிப்படையில் உருவாக்கப்பட்ட அதிகாரப் படிநிலைகளின் விளைவாகும். 

பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, நிறுவன மற்றும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமானால், நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 

உலகளவில் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்கள் முன்னணியில் இருந்தாலும், அவர்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறையிலான பங்களிப்புகள் இன்னும் சமூகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். 

அரசியல் துறையில் நுழையும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய பிரதமர், பெண்கள் தீர்மானங்களை எடுக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவது, நீண்டகாலமாக நிலவும் பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலையின் முடிவாகும் எனத் தெரிவித்தார். 

அரசியல் களத்திலுள்ள பெண்கள் துன்புறுத்தல்கள், அவதூறுகள் மற்றும் ஒரங்கட்டப்படுதல் போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாவதால், அவர்கள் தலைமைத்துவத்திலிருந்து விலகும் நிலை ஏற்படுகிறது. 

இது வெறும் பாதுகாப்பு தொடர்பான விடயம் மட்டுமல்ல் பெண்கள் தங்களின் சுதந்திரம் மற்றும் அதிகாரத்துடன் செயல்படக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியமாகும். 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்களின் நெகிழ்ச்சித்தன்மையும் அரசியல் அர்ப்பணிப்பும் இணையும் போது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சான்று எனச் சுட்டிக்காட்டினார். 

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ், வரலாற்றில் முதல்முறையாக 20 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தலைமைத்துவம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, அது தற்போதுள்ள அமைப்புகளை மறுசீரமைப்பதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல பிரதமர் ஹரிணி  தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி உலகப் பெண் மாளிகையில் நடைபெற்ற 'World Woman Davos Agenda 2026' நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அது பாலின அடிப்படையில் உருவாக்கப்பட்ட அதிகாரப் படிநிலைகளின் விளைவாகும். பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, நிறுவன மற்றும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமானால், நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகளவில் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்கள் முன்னணியில் இருந்தாலும், அவர்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறையிலான பங்களிப்புகள் இன்னும் சமூகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் துறையில் நுழையும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய பிரதமர், பெண்கள் தீர்மானங்களை எடுக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவது, நீண்டகாலமாக நிலவும் பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலையின் முடிவாகும் எனத் தெரிவித்தார். அரசியல் களத்திலுள்ள பெண்கள் துன்புறுத்தல்கள், அவதூறுகள் மற்றும் ஒரங்கட்டப்படுதல் போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாவதால், அவர்கள் தலைமைத்துவத்திலிருந்து விலகும் நிலை ஏற்படுகிறது. இது வெறும் பாதுகாப்பு தொடர்பான விடயம் மட்டுமல்ல் பெண்கள் தங்களின் சுதந்திரம் மற்றும் அதிகாரத்துடன் செயல்படக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியமாகும். இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்களின் நெகிழ்ச்சித்தன்மையும் அரசியல் அர்ப்பணிப்பும் இணையும் போது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சான்று எனச் சுட்டிக்காட்டினார். இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ், வரலாற்றில் முதல்முறையாக 20 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தலைமைத்துவம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, அது தற்போதுள்ள அமைப்புகளை மறுசீரமைப்பதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement