• Jan 23 2026

அனகொண்டா 1,2 பாகங்களை இனி அரசியல் களத்தில் பார்க்கலாம் - எதிர்க்கட்சியை சாடிய பிரதி அமைச்சர்

Chithra / Jan 22nd 2026, 7:02 pm
image

  

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, எதிர்க்கட்சியினரின் அரசியல் நகர்வுகளை 'அனகொண்டா' திரைப்பட வரிசைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். 

தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்ததாக குறிப்பிட்ட அவர், அரசாங்கம் அந்த வேதன உயர்வைச் சரியாக நடைமுறைப்படுத்திய போது, எதிர்க்கட்சியினர் அரங்கேற்றிய நாடகத்தையே அவர் "அனகொண்டா - 1" திரைப்படத்திற்கு ஒப்பிட்டு கூறினார். 

அத்தோடு, தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாகவும், ஒருவேளை அந்தப் பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டால், மக்கள் "அனகொண்டா - 2" திரைப்படத்தையும் அரசியல் ரீதியாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார். 

"அனகொண்டா 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களையும் அரசியல் களத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வந்த பின்னர், அனகொண்டா 2 படத்தின் கதையை அனைவரும் பார்த்துக்கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சியின் இவ்வாறான அரசியல் நகர்வுகள் தோல்வியடையும் என்பதையே அவர் இவ்வாறான உருவகங்கள் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனகொண்டா 1,2 பாகங்களை இனி அரசியல் களத்தில் பார்க்கலாம் - எதிர்க்கட்சியை சாடிய பிரதி அமைச்சர்   நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, எதிர்க்கட்சியினரின் அரசியல் நகர்வுகளை 'அனகொண்டா' திரைப்பட வரிசைகளுடன் ஒப்பிட்டு விமர்சித்தார். தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்ததாக குறிப்பிட்ட அவர், அரசாங்கம் அந்த வேதன உயர்வைச் சரியாக நடைமுறைப்படுத்திய போது, எதிர்க்கட்சியினர் அரங்கேற்றிய நாடகத்தையே அவர் "அனகொண்டா - 1" திரைப்படத்திற்கு ஒப்பிட்டு கூறினார். அத்தோடு, தற்போது பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாகவும், ஒருவேளை அந்தப் பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டால், மக்கள் "அனகொண்டா - 2" திரைப்படத்தையும் அரசியல் ரீதியாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார். "அனகொண்டா 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களையும் அரசியல் களத்தில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வந்த பின்னர், அனகொண்டா 2 படத்தின் கதையை அனைவரும் பார்த்துக்கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியின் இவ்வாறான அரசியல் நகர்வுகள் தோல்வியடையும் என்பதையே அவர் இவ்வாறான உருவகங்கள் மூலம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement