தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமைகளைச் செய்த ஆயுதப்படை அதிகாரிகளை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரிட்டன் விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட ஆகியோருக்கு எதிராக போக்குவரத்து தடைகள் சொத்து முடக்கம் உட்பட தடைகளை அறிவித்துள்ளது.
2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை காணப்பட்டபோதிலும், 2002 பெப்ரவரி முதல் செப்டம்பர் 2005 வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் 363 கொலைகளில் ஈடுபட்டனர்.
2005 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்தன.
இவற்றில் மிகவும் பாரதூரமான சம்பவங்களாக டிசம்பர் நான்காம், ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை குறிப்பிடலாம்,
2006ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி கடற்படை கலத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலையும், 2006ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இராணுவ தலைமையகத்திற்குள் இராணுவ தளபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் குறிப்பிடலாம்.
இவற்றிற்கு அப்பாலும் எனது அரசாங்கம் 2006 ஜனவரியிலும் ,ஜூன் மாதத்திலும் ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும், விடுதலைப்புலிகளுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது,
எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியது.
ஜூன் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பேருந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலே எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமான தருணம், இந்த தாக்குதலில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 86 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலர் சிறுவர்கள்.
ஜூலை 2006 இல் மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப்புலிகள் மூடி திருகோணமலை மாவட்ட விவசாயிகளிற்கான நீர் விநியோகத்தை தடுத்ததை தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பமானது.
2009 மே மாதம் விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படும்வரை யுத்தத்தை நிறுத்தவில்லை.
இராணுவ நடவடிக்கைகளின் போது பரந்துபட்ட அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன்.
"2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது." என மகிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு அரசாங்கங்களால் துன்புறுத்தப்படும் முன்னாள் ஆயுதப்படையினர்; பிரிட்டன் தடைகள் குறித்து மஹிந்த அறிக்கை தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடமைகளைச் செய்த ஆயுதப்படை அதிகாரிகளை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக நிற்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரிட்டன் விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளியிட்டார்.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவதுவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் முன்னாள் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் இராணுவதளபதி ஜகத் ஜெயசூரிய, முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட ஆகியோருக்கு எதிராக போக்குவரத்து தடைகள் சொத்து முடக்கம் உட்பட தடைகளை அறிவித்துள்ளது.2002 யுத்த நிறுத்த உடன்படிக்கை காணப்பட்டபோதிலும், 2002 பெப்ரவரி முதல் செப்டம்பர் 2005 வரையான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் 363 கொலைகளில் ஈடுபட்டனர்.2005 நவம்பரில் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்தன.இவற்றில் மிகவும் பாரதூரமான சம்பவங்களாக டிசம்பர் நான்காம், ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களை குறிப்பிடலாம்,2006ம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி கடற்படை கலத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலையும், 2006ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இராணுவ தலைமையகத்திற்குள் இராணுவ தளபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் குறிப்பிடலாம்.இவற்றிற்கு அப்பாலும் எனது அரசாங்கம் 2006 ஜனவரியிலும் ,ஜூன் மாதத்திலும் ஜெனீவாவிலும் ஒஸ்லோவிலும், விடுதலைப்புலிகளுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது,எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியது.ஜூன் 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கெப்பிட்டிகொல்லாவையில் பயணிகள் பேருந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலே எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் மிகவும் முக்கியமான தருணம், இந்த தாக்குதலில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 86 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலர் சிறுவர்கள்.ஜூலை 2006 இல் மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப்புலிகள் மூடி திருகோணமலை மாவட்ட விவசாயிகளிற்கான நீர் விநியோகத்தை தடுத்ததை தொடர்ந்து யுத்தம் மீண்டும் ஆரம்பமானது.2009 மே மாதம் விடுதலைப்புலிகள் முற்றாக தோற்கடிக்கப்படும்வரை யுத்தத்தை நிறுத்தவில்லை.இராணுவ நடவடிக்கைகளின் போது பரந்துபட்ட அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். "2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக அரசியலில் நுழைந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் மீது தடைகள் விதிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழர்களைத் தண்டிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்பது தெளிவாகிறது." என மகிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.