• Dec 18 2024

முன்னாள் சுகாதார அமைச்சரின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்!

Chithra / Dec 18th 2024, 2:58 pm
image

 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகளை ஒரு வார காலத்திற்கு முடக்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான நடைமுறை, நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது 

2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வார காலத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க எதிர்பார்ப்பதாக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இந்த விசாரணை தொடர்பாக இதற்கு முன்னர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, உறவினர்கள் என பலரின் சொத்துக்களை  முடக்க கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது 

முன்னாள் சுகாதார அமைச்சரின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகளை ஒரு வார காலத்திற்கு முடக்குமாறு கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான நடைமுறை, நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வார காலத்திற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த இடைநீக்க உத்தரவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் மேலும் நீடிக்க எதிர்பார்ப்பதாக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளதுஇந்த விசாரணை தொடர்பாக இதற்கு முன்னர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, உறவினர்கள் என பலரின் சொத்துக்களை  முடக்க கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது 

Advertisement

Advertisement

Advertisement