• Dec 18 2024

மானிப்பாய் பிரதேச சபையின் அசமந்தம் - தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் மக்கள்!

Chithra / Dec 18th 2024, 2:47 pm
image

 

மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர்.

இதனால் அவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றது. 

அத்துடன் அவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

நீரோடும் கால்வாய்களும் சீராக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மழைவெள்ளம் தேங்கி நிற்கின்றது.

வீதிகளில் உள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. அதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை.

இது பற்றி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசனுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர் அதற்கு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும்  எடுக்கவில்லை.

மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத காலத்தில் அவரது செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



மானிப்பாய் பிரதேச சபையின் அசமந்தம் - தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் மக்கள்  மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றனர்.இதனால் அவ் வீதியில் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றது. அத்துடன் அவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.நீரோடும் கால்வாய்களும் சீராக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மழைவெள்ளம் தேங்கி நிற்கின்றது.வீதிகளில் உள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. அதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை.இது பற்றி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சபேசனுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர் அதற்கு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும்  எடுக்கவில்லை.மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத காலத்தில் அவரது செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement