• Oct 22 2024

வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் - பெரும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரோஹித!

Chithra / Oct 21st 2024, 7:42 am
image

Advertisement

 

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு பி.எம்.டபில்யு கார் ஒன்றும்  மிட்சுபிஷி ஜீப் ஒன்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பி.எம்.டபில்யு காரின் பெறுமதி ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இரண்டு கார்களையும் வரி செலுத்தாமல் துறைமுகத்தில் இருந்து இரகசியமாக எடுத்துச் சென்று தனது மருமகன் வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அருப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு வாகனங்கள் மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர், இரண்டு சொகுசு வாகனங்களைத் கைப்பற்றிய நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட சொகுசு வாகனங்கள் - பெரும் சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரோஹித  முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதிவு செய்யப்படாத சொகுசு பி.எம்.டபில்யு கார் ஒன்றும்  மிட்சுபிஷி ஜீப் ஒன்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய முறைப்பாட்டிற்கு அமைய குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட பி.எம்.டபில்யு காரின் பெறுமதி ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இரண்டு கார்களையும் வரி செலுத்தாமல் துறைமுகத்தில் இருந்து இரகசியமாக எடுத்துச் சென்று தனது மருமகன் வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அருப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு வாகனங்கள் மறைத்து வைத்திருப்பதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் பின்னர், இரண்டு சொகுசு வாகனங்களைத் கைப்பற்றிய நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரிடம் எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement