• Nov 15 2025

சுதந்திரபுரத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி

Chithra / Nov 14th 2025, 2:11 pm
image


யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. 

தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில் 2021ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுதந்திரபுரத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப் பணி யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் காலை முதல் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில் 2021ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement