யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தானியங்கள் மற்றும் மரக்கறிகளை நெடுந்தீவிலே உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் ஆபிரிக்க நத்தைகளில் ஊடுருவல், அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அங்கு வாழ்கின்ற மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து போகும் துற்பாக்கியமும் ஏற்படும்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தானியங்கள் மற்றும் மரக்கறிகளை நெடுந்தீவிலே உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் ஆபிரிக்க நத்தைகளில் ஊடுருவல், அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அங்கு வாழ்கின்ற மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து போகும் துற்பாக்கியமும் ஏற்படும். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.