• Apr 02 2025

யாழ் நாகர்கோவில் கிராம இளைஞர்களின் முன்மாதிரியான செயல்...! குவியும் பாராட்டு...!samugammedia

Sharmi / Jan 30th 2024, 9:46 am
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பகுதியில்  நேற்று  நாகர்கோவில்  நாகதம்பிரான் ஆலய முற்பகுதி வீதி தொடக்கம் கண்ணகை அம்மன் கோவில் முன் பிரதான வீதியோரமாக  உள்ள சதுப்பு நிலத்தை அண்டிய பகுதிகளில் நிழல் தரும் மரமான மருத மரம் நடுகையை  நாகர்கோவில் கிராம லியோ இளைஞர் அணியினர் முன்னெடுத்தனர்.

“மரம் வளர்ப்போம் பசுமையான இயற்கையை பேணுவோம்”என்ற தொனிப்பொருளில் குறித்த இளைஞர்களால் இந்த செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பாடசாலை மாணவர்கள், கிராம நலன் விரும்பிகள், சுகாதாரப் பரிசோதகர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை  கடற்கரை வீதியோரங்களில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் மரம் நடுகை இடம்பெறவிருப்பதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் குறித்த இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


யாழ் நாகர்கோவில் கிராம இளைஞர்களின் முன்மாதிரியான செயல். குவியும் பாராட்டு.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  நாகர்கோவில் பகுதியில்  நேற்று  நாகர்கோவில்  நாகதம்பிரான் ஆலய முற்பகுதி வீதி தொடக்கம் கண்ணகை அம்மன் கோவில் முன் பிரதான வீதியோரமாக  உள்ள சதுப்பு நிலத்தை அண்டிய பகுதிகளில் நிழல் தரும் மரமான மருத மரம் நடுகையை  நாகர்கோவில் கிராம லியோ இளைஞர் அணியினர் முன்னெடுத்தனர்.“மரம் வளர்ப்போம் பசுமையான இயற்கையை பேணுவோம்”என்ற தொனிப்பொருளில் குறித்த இளைஞர்களால் இந்த செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.பாடசாலை மாணவர்கள், கிராம நலன் விரும்பிகள், சுகாதாரப் பரிசோதகர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை  கடற்கரை வீதியோரங்களில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் மரம் நடுகை இடம்பெறவிருப்பதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் குறித்த இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement