• Dec 06 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விரைவில் சிறந்த செய்தியை எதிர்பார்க்கலாம்! - அநுர அறிவிப்பு

Chithra / Nov 11th 2024, 8:08 am
image

 

அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாஜுதீனின் கொலைக்கு யாரும் பொறுப்புக் கூறப்படவில்லை, லசந்தவின் மரணத்திற்கு இன்னும் பதில் இல்லை, எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

அமைதியான குடிமக்களுக்கு நீதி வழங்கவும், சாதாரண மக்கள் மீண்டும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்த வழக்குகள் அனைத்தையும் நாங்கள் தொடர்கிறோம்.

அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சிறந்த செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விரைவில் சிறந்த செய்தியை எதிர்பார்க்கலாம் - அநுர அறிவிப்பு  அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.தாஜுதீனின் கொலைக்கு யாரும் பொறுப்புக் கூறப்படவில்லை, லசந்தவின் மரணத்திற்கு இன்னும் பதில் இல்லை, எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.அமைதியான குடிமக்களுக்கு நீதி வழங்கவும், சாதாரண மக்கள் மீண்டும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்த வழக்குகள் அனைத்தையும் நாங்கள் தொடர்கிறோம்.அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சிறந்த செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்

Advertisement

Advertisement

Advertisement