2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு வாகன உரிமையாளர்ளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு, நாரஹேன்பிட்டி தலைமைக் காரியாலயம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில் சுமார் 100,000 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் குவிந்து கிடப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட, ஆனால் விண்ணப்பதாரர்களால் இன்னும் பெறப்படாத தகடுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் தங்களது வாகனப் பதிவுத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதேசமயம், இதர மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்டச் செயலக அலுவலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளைகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான விசாரணைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு, பொதுமக்கள் 011‑2033333 என்ற எண்ணின் மூலம் திணைக்களத்தின் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.
தேங்கி கிடக்கும் வாகன பதிவுத் தகடுகள்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இறுதி எச்சரிக்கை 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு வாகன உரிமையாளர்ளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.கொழும்பு, நாரஹேன்பிட்டி தலைமைக் காரியாலயம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில் சுமார் 100,000 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் குவிந்து கிடப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட, ஆனால் விண்ணப்பதாரர்களால் இன்னும் பெறப்படாத தகடுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் தங்களது வாகனப் பதிவுத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.அதேசமயம், இதர மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்டச் செயலக அலுவலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கிளைகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.இது தொடர்பான விசாரணைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு, பொதுமக்கள் 011‑2033333 என்ற எண்ணின் மூலம் திணைக்களத்தின் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.