• Oct 30 2024

மணிப்பூரின் 2 இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு!

Tamil nila / Oct 27th 2024, 8:50 pm
image

Advertisement

மணிப்பூரில் நேற்று இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

 இந்த சம்பவங்கள் மேற்கு இம்பாலின் கோட்ரூக் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன. 

 கோட்ரூக் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் அதிநவீனத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் குக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

 இதனையடுத்து, காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

 இந்த துப்பாக்கிச் சூடானது நான்கு மணி நேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதனிடையே, பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து குக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

 அங்கிருந்த காவல்துறையினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


மணிப்பூரின் 2 இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு மணிப்பூரில் நேற்று இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இந்த சம்பவங்கள் மேற்கு இம்பாலின் கோட்ரூக் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.  கோட்ரூக் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் அதிநவீனத் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் குக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  இதனையடுத்து, காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இந்த துப்பாக்கிச் சூடானது நான்கு மணி நேரம் நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து குக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.  அங்கிருந்த காவல்துறையினர் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement