• Dec 27 2024

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு; விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் தீர்மானம்!

Chithra / Dec 24th 2024, 11:29 am
image


தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான அனுமதியினை எதிர்வரும் ஜனவரி 10 வரை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன்போது, மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட  நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நஷ்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிப்பு; விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் தீர்மானம் தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான அனுமதியினை எதிர்வரும் ஜனவரி 10 வரை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.இதன்போது, மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, அந்த காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட  நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயாபீன் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நஷ்டஈடாக ஹெக்டேயருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement