• Feb 06 2025

கூடுதல் சுவைச்சாறுக்குக் கட்டணம் : மெக்டோனல்ட்ஸ் அறிவிப்பு

Tharmini / Dec 7th 2024, 11:52 am
image

மெக்டோனல்ட்ஸ் உணவகம் 2025 ஜனவரி 2 முதல் கூடுதலாக சுவைச்சாறு (sauce) கேட்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்போவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

‘2025க்கு என்ன ஒரு பயங்கரத் தொடக்கம்’ என்று ஓர் இணையவாசியும் ‘இது மோசமானது’ என்று மற்றொருவரும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் சுவைச்சாறு வேண்டுமென்று கேட்போரிடம் பெயரளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மெக்டோனல்ட்ஸ் தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளது.

உணவுப்பொருள்களின் விலை அதிகரிப்பாலும் விரயமாகும் உணவு வகைகளைக் கையாள அதிகம் செலவாவதாலும் இந்தக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அது தெரிவித்து இருந்தது.

இருப்பினும், கூடுதல் ‘கெட்சப்’ மற்றும் பூண்டு மிளகாய் சுவைச்சாறுக்குக் கட்டணம் இல்லை என்று மெக்டோனல்ட்ஸ் கூறியுள்ளது.

அவை தவிர, மற்ற எல்லா கூடுதல் சுவைச்சாறுக்கும் ‘டப்’ ஒன்றுக்கு 50 காசு முதல் 70 காசு வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2012ஆம் ஆண்டிலும் கூடுதல் சுவைச்சாறுக்கு மெக்டோனல்ட்ஸ் கட்டணம் அறிவித்தது. 

கூடுதலாகக் கேட்கப்படும் ஒவ்வொரு சுவைச்சாறுக்கும் 30 காசு என்று அப்போது அது தெரிவித்து இருந்தது.

கூடுதல் சுவைச்சாறுக்குக் கட்டணம் : மெக்டோனல்ட்ஸ் அறிவிப்பு மெக்டோனல்ட்ஸ் உணவகம் 2025 ஜனவரி 2 முதல் கூடுதலாக சுவைச்சாறு (sauce) கேட்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்போவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.‘2025க்கு என்ன ஒரு பயங்கரத் தொடக்கம்’ என்று ஓர் இணையவாசியும் ‘இது மோசமானது’ என்று மற்றொருவரும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் சுவைச்சாறு வேண்டுமென்று கேட்போரிடம் பெயரளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மெக்டோனல்ட்ஸ் தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளது.உணவுப்பொருள்களின் விலை அதிகரிப்பாலும் விரயமாகும் உணவு வகைகளைக் கையாள அதிகம் செலவாவதாலும் இந்தக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அது தெரிவித்து இருந்தது.இருப்பினும், கூடுதல் ‘கெட்சப்’ மற்றும் பூண்டு மிளகாய் சுவைச்சாறுக்குக் கட்டணம் இல்லை என்று மெக்டோனல்ட்ஸ் கூறியுள்ளது.அவை தவிர, மற்ற எல்லா கூடுதல் சுவைச்சாறுக்கும் ‘டப்’ ஒன்றுக்கு 50 காசு முதல் 70 காசு வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.2012ஆம் ஆண்டிலும் கூடுதல் சுவைச்சாறுக்கு மெக்டோனல்ட்ஸ் கட்டணம் அறிவித்தது. கூடுதலாகக் கேட்கப்படும் ஒவ்வொரு சுவைச்சாறுக்கும் 30 காசு என்று அப்போது அது தெரிவித்து இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement