• Mar 31 2025

இயற்கை ததும்பும் : திகிலூட்டும் பெலும் குகைகள் !

Tharmini / Dec 7th 2024, 12:31 pm
image

உலகில் கண்டறியப்படாத பல மர்மங்களும் ஆச்சரியங்களும் குகைகளில் தான் உறங்கிக் கிடக்கின்றன. 

பெலும் குகைகள் இந்திய துணை கண்டத்தில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய குகையாக அமைகிறது. 

இந்த குகையின் நிலத்தடியில் பல சுரங்க பாதைகள் மற்றும் அரங்குகள் அமைந்து உள்ளது. 

சுமார் 3229 மீட்டர் நீளமுள்ள இந்தக் குகையைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பூட்.

பூமிக்குள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மேகாலயாவில் அமைந்துள்ள கிரேம் லையாத் பிரா குகைகள் முதல் இடத்தை வகிக்கிறது.

பெலும் குகைகள் முதல்முறையாக 1884 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலத்தவரால் குறிப்பிடப்பட்டது. 

பெலும் குகைகள் இயற்கையின் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. 

இதில் நீண்ட தூரங்களுக்கு சுரங்கபாதைகள் மற்றும் வழிகள், பாறை படிகங்கள் மற்றும் உருவாக்கங்கள் அமைந்துள்ள. 

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குகை, தண்ணீர் சொட்டும் வடிவத்தாலான கூம்பு வடிவ பாறைகளால் ஆனது. 

கசித்துளி படிகம் என்று சொல்லப்படும் இந்தப் படிகங்களில் சொட்டுச் சொட்டாக குளிர்ந்த, தூய நீர் வடிந்து கொண்டே உள்ளது. குகையின் நடுவே சிறு அருவியையும் பார்க்க முடியும்.

திறந்து விட்ட குழாயில் தண்ணீர்க் கொட்டுவது போல, பாறையைத் துளைத்துக் கொண்டு இடைவிடாது இந்த அருவியில் தண்ணீர்க் கொட்டுகிறது.

இந்த குகையில் இயற்கையாக பாறையால் உருவான சிற்பங்கள், நீரூற்று மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குளம் ஒரு சிவலிங்கம் ஆகியவை இவ்விடத்திற்கு பல சுற்றுலா பயணிகள் வருகைக்கு காரணமாக அமைகிறது.

பெலும் குகைகள் கர்னூலில் இருந்து 109 கிலோமீட்டர் தூரத்திலும், ஹைதராபாத்தில் இருந்து 336 கிலோ மீட்டர் தூரத்திலும் மற்றும் பெங்களூருவில் இருந்து 292 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. 

இந்த இடத்தை சாலை மூலம் கர்னூல் வாயிலாக அடையலாம். 

மேலும், இங்குள்ள ஒர் அறையில் காணப்படும் கசித்துளி படிவுகள், பார்ப்பதற்கு படமெடுத்தாடும் நாகப்பாம்பு போல் காட்சியளிகிறது.

இந்த இடத்தின் மேற்கூரையில் காணப்படும் அமைப்புகள் ஆயிரம் பாம்புகள் படமெடுத்தாடுவதை போல நம்மை மிரள வைத்துகிறது.

விசாலமான அறைகள், கசித்துளி படிவுகள், கருப்பு சுண்ணாம்பு கற்கள், நீண்ட சுரங்க வழிகள் என மர்மமான இடத்துக்குள் நுழைந்த திகில் அனுபவத்தை இந்த இடம் அளிக்கும்.

இயற்கை ததும்பும் : திகிலூட்டும் பெலும் குகைகள் உலகில் கண்டறியப்படாத பல மர்மங்களும் ஆச்சரியங்களும் குகைகளில் தான் உறங்கிக் கிடக்கின்றன. பெலும் குகைகள் இந்திய துணை கண்டத்தில் அமைந்துள்ள இரண்டாவது மிகப்பெரிய குகையாக அமைகிறது. இந்த குகையின் நிலத்தடியில் பல சுரங்க பாதைகள் மற்றும் அரங்குகள் அமைந்து உள்ளது. சுமார் 3229 மீட்டர் நீளமுள்ள இந்தக் குகையைக் கண்டறிந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர் ராபர்ட் புரூஸ் பூட்.பூமிக்குள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மேகாலயாவில் அமைந்துள்ள கிரேம் லையாத் பிரா குகைகள் முதல் இடத்தை வகிக்கிறது.பெலும் குகைகள் முதல்முறையாக 1884 ஆம் ஆண்டு ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்ற ஆங்கிலத்தவரால் குறிப்பிடப்பட்டது. பெலும் குகைகள் இயற்கையின் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது. இதில் நீண்ட தூரங்களுக்கு சுரங்கபாதைகள் மற்றும் வழிகள், பாறை படிகங்கள் மற்றும் உருவாக்கங்கள் அமைந்துள்ள. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குகை, தண்ணீர் சொட்டும் வடிவத்தாலான கூம்பு வடிவ பாறைகளால் ஆனது. கசித்துளி படிகம் என்று சொல்லப்படும் இந்தப் படிகங்களில் சொட்டுச் சொட்டாக குளிர்ந்த, தூய நீர் வடிந்து கொண்டே உள்ளது. குகையின் நடுவே சிறு அருவியையும் பார்க்க முடியும்.திறந்து விட்ட குழாயில் தண்ணீர்க் கொட்டுவது போல, பாறையைத் துளைத்துக் கொண்டு இடைவிடாது இந்த அருவியில் தண்ணீர்க் கொட்டுகிறது.இந்த குகையில் இயற்கையாக பாறையால் உருவான சிற்பங்கள், நீரூற்று மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குளம் ஒரு சிவலிங்கம் ஆகியவை இவ்விடத்திற்கு பல சுற்றுலா பயணிகள் வருகைக்கு காரணமாக அமைகிறது.பெலும் குகைகள் கர்னூலில் இருந்து 109 கிலோமீட்டர் தூரத்திலும், ஹைதராபாத்தில் இருந்து 336 கிலோ மீட்டர் தூரத்திலும் மற்றும் பெங்களூருவில் இருந்து 292 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த இடத்தை சாலை மூலம் கர்னூல் வாயிலாக அடையலாம். மேலும், இங்குள்ள ஒர் அறையில் காணப்படும் கசித்துளி படிவுகள், பார்ப்பதற்கு படமெடுத்தாடும் நாகப்பாம்பு போல் காட்சியளிகிறது.இந்த இடத்தின் மேற்கூரையில் காணப்படும் அமைப்புகள் ஆயிரம் பாம்புகள் படமெடுத்தாடுவதை போல நம்மை மிரள வைத்துகிறது.விசாலமான அறைகள், கசித்துளி படிவுகள், கருப்பு சுண்ணாம்பு கற்கள், நீண்ட சுரங்க வழிகள் என மர்மமான இடத்துக்குள் நுழைந்த திகில் அனுபவத்தை இந்த இடம் அளிக்கும்.

Advertisement

Advertisement

Advertisement