நாட்டில் இன மத ஒருமைப்பாட்டை வளர்க்க ஆவண செய்யுமாறு யாழ்ப்பாண சர்வமதக் குழுவினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பின் பின்னர் யாழ்ப்பாண சர்வமதக் குழுமத்தினரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மகஜரிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சர்வமதப் பிரதிநிதிகளாகிய நாம் இலங்கை ஜனாதிபதியாகிய உங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களாகிய எமது கோரிக்கைகள் மீதான கரிசனையை தெரிவித்துக்கொள்ள விளைகின்றோம்.
2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகள் பாரிய அளவில் போதுமானதாக அமையவில்லை. தமிழ் மக்கள் வேதனையோடு அனுபவித்து வந்த பாகுபாடுகள் எவ்விதமான விவாதமும் இன்றி தொடர்ந்து வருகின்றது. இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாது எம் மக்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள். போர்க் காலங்களிலும் போருக்குப் பிற்பட்ட காலங்களிலும் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த துன்பங்கள், மன உளைச்சல்களோடு வாழ்ந்த மக்கள் மேலும் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடிகளால் எதிர்பாராத வறுமை நிலைக்கும் வேலை இழப்பிற்கும் ஆளாகித் தவிக்கின்றார்கள்.
இலங்கை ஜனாதிபதியாகிய உங்களின் உடனடியான, அதிதீவிரமான கவனத்திற்குப் பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம்:
1.எமது நாட்டில் இன மத ஒருமைப்பாட்டை வளர்க்க ஆவண செய்யுமாறு வேண்டுகின்றோம். ஒவ்வோரு மதத்திலும் இனக் குழுமத்திலும் காணப்படும் ஒரு சில விடயங்கள் இன, மத ஒருமைப்பாட்டை சிதைக்க வல்லனவாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இவ்வாறான எதிர்மறையான விடயங்களை இனங்கண்டு களைவதன் மூலம் எமது நாட்டின் இனமத ஒருமைப்பாட்டை இவ்வாறான குறுகிய மனப்பான்மையுள்ளவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
2.அனைத்து மத, இன மக்களும் தமது அடிப்படை உரிமையை அனுபவிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். எமது நாடானது பல்லின, பல் சமய மக்களைக் கொண்ட நாடாக இருக்கிறது. இலங்கை அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள முதன்மை நிலையானது பன்மைத் தன்மைக்கு எதிரானதாக அமைகிறது.
சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமானது இந்நாட்டில் ஆயுதப் போரானது பல ஆண்டுகளாக தொடருவதற்கு காரணியாக அமைந்தது. இந்நிலையானது இன்றும் தொடருவதைக் காணக்கூடியவாறு இருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏனைய இனக் குழுமங்களை, மதங்களைவிட சிங்கள பௌத்தமே மேலானது என்பதை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக தெரிவிப்பதும் வேதனையளிக்கின்றது. இலங்கை அரசும், அரச நிறுவனங்களும் எமது நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தமது மத நம்பிக்கையை, அனுஸ்டானங்களை எவ்வித பயமும் இன்றி சுதந்திரமாகக் கடைப்பிடிக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும்.
3.இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் குழுமங்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளையும் தமிழர் வாழ் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியதும், வன்முறையை உருவாக்கக் கூடியதுமான உரைகளை நிகழ்த்தும் சிங்கள அரசியல்வாதிகள் பௌத்த மதத்தலைவர்கள் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகள் மதங்களுக்கிடையில் பிரிவினைகளையும் குரோதங்களையும் உருவாக்கும்.
பௌத்த மத நம்பிக்கையாளர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள், விகாரைகள் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்போடும் தொல்பொருள் திணைக்களாத்தின் அனுசரணையுடனும் கட்டப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மிகப் புராதண இந்து ஆலயத்திற்கருகில் நயினாதீவில் கட்டப்படும் புத்த சிலை, கொக்கிளாயில் தனியார் காணியில் கட்டப்படும் புத்த சிலை, விகாரை, இரணைமடுக் குளப்பகுதியில் இந்து ஆலயத்திற்கு அருகில் கட்டப்படும் புத்த சிலை என்பன ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் அவ்விடங்களில் வாழ முடியாத நிலையையும், தமது மதத்தைப் பின்பற்ற முடியாத நிலையையும் தொடர்ச்சியான காலநித்துவ சூழமைவையும் உருவாக்குகிறது.
4.போர்க் காலங்களில் தமது இடங்களிலிருந்து துரத்தப்பட்ட வடபகுதி முஸ்லிம் சமூகத்தவர்கள் தமது இடங்களில் மீளக்குடியமர வழிசெய்யப்படவேண்டும். இவர்களது காணிப் பிணக்குகள் சீர்செய்யப்படவேண்டும். ஆண்களுக்கான ஒரு முஸ்லிம் பாடசாலையும், பெண்களுக்கான ஒரு முஸ்லிம் பாடசாலையும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னேடுக்க அரசாங்கம் உதவி செய்யவேண்டும்.
5.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரச அதிகாரிகளாலும் பாதுகாப்புப் படையினராலும் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகள் உடனடியாக மீளக்கையளிக்கப்பட வேண்டும்.
காணிகள் மீளக்கையளிக்கப்படாமையால் பல இந்து ஆலயங்களில் பல தசாப்தங்களாக பூஜை வழிபாடுகள் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சில கோவில்களை விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பார்க்க மட்டுமே கூடியதாக இருக்கிறது.
மயிலிட்டி கடற்கரைப் பகுதி, அதனை அண்டியுள்ள வளமான நிலப்பகுதி, மயிலிட்டி துறைமுகம் (ஒரு காலத்தில் இலங்கை மீன் உற்பத்தியில் 40 சதவீதமான மீனைப் பெற்றுக்கொடுத்த பகுதி), ஏனைய பகுதிகளில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏறத்தாழ 15000-20000 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்ட பரவிப்பாஞ்சான், கேப்பாப்பிளவு நிலங்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
6.போரின் இறுதி நாட்களில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சார்பான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்களை கண்டறியுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒரு சில தேசிய பொறிமுறைகள் எதிர்பார்க்கப்பட்ட நேர்மறையான விளைவுகளைத் தரவில்லை, யாரையும் பொறுப்புக்கூறும் நிலையை உருவாக்கவில்லை. எனவே, சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் (நீதிபதிகள், விசாரணையாளர்கள்) சட்ட மீறல்களை விசாரணைசெய்து பொறுப்புக் கூறலை துரிதப்படுத்த வலியுறுத்துகிறோம். எடுத்துக் காட்டாக: 2006 இல் திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஐந்து இளைஞர்கள், மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தன்னார்வப் பணியாளர்கள்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்யுமாறு வலியுறுத்துகிறோம். எமக்குக் கிடைத்த தரவுகளுக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 104 பாடசாலைகளில் 585 சிறுவர்கள் இரு பெற்றோர்களையும் இழந்த நிலையிலும், ஒரு பெற்றோரை இழந்தோர் தொகை இன்னும் அதிகமாக இருப்பதையும் காணலாம். அதே மாவட்டத்தில் 444 சிறுவர்கள் விஷேடதேவையுடையவர்களாகவும், மேலும் 900-1000 வரையான சிறுவர்களின் உடல்களில் வெடிச்சிதறல்களும் nஷல் சிதறல்களும் காணப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.
7.போதைப் பொருள் பாவனை தொடர்பான விடயங்களில் நேர்மையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இது சார்பான விழிப்புணர்வை இளையோருக்கு வழங்கி தேவையில் இருப்போருக்கு விருப்ப சிகிச்சைக்கு வழிசமைத்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த உதவிகள் வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை சிறையிலடைத்தல், இராணுவ புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புதல் போன்ற செயற்பாடுகள் அவர்களை மேலும் அந்நியப் படுத்துவதோடு உதவி நாடுவதையும் தடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
8.வடக்கில் காணப்படும் தன்னார்வப் போதை புனர்வாழ்வு மையங்களின் குறைபாடு தேவையில் உள்ளோருக்கு பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது. பொது மக்கள் அனுகக்கூடிய விதமான இடங்களில் பொதுச் சுகாதார அமைச்சும், சமூக மேம்பாட்டு அமைச்சும் இணைந்து புனர்வாழ்வு நிலையங்களை அமைக்கவேண்டும்.
9.அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம். இவர்களுள் சிலர் 15-20 வருடங்களாக சிறையில் வாடுகிறார்கள். வவுனியாவைச் சேர்ந்த திரு. விமலறூபன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. டில்றுக்ஷன் போன்ற அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துவிட்டது. இறந்த இருவரோடு பல கைதிகள் தங்களை வவுனியா சிறைச்சாலையிலிருந்து தென்பகுதிச் சிறைகளுக்கு மாற்ற வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்தவேளை பலர் சிறைக் காவலர்களாலும் ஏனைய கைதிகளாலும் தாக்கப்பட்டு பலத்த காயங்களோடு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இவர்களது குடும்பங்களுக்கு எவ்விதமான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை, இறப்புச் சான்றிதழ்களும் கொடுக்கப்படவில்லை.
மிகக் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்துகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் மாற்றீடாக உருவாக்கப்படும் சட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையின் பிரகாரம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் படி உருவாக்கப்பட வேண்டும்.
10.காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பல காலங்களாக கேள்வி எழுப்பப்பட்ட போதும் எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. இடைக்கால நஸ்டஈடு வழங்கும் முயற்சியானது இவர்களின் நேரிய தேடலை குறைத்து மதிப்பிடும் முயற்சியாகவும் அதேவேளை அரசாங்கமானது இவர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய பணியிலிருந்து தப்பிக்கொள்ளும் வழியாகவும் கருதப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் அமைதிப் போராட்டங்கள் பாதுகாப்புப் படையினராலும் காவல்துறையினராலும் வன்முறையால் அடக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும். இவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதையும், பயமுறுத்தப் படுவதையும், கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவை சீர்குலைக்க ஏதுவாக அமைகிறது.
முன்று வகையான காணாமல் போனோர், ஆக்கப்பட்டோரைப் பகுக்கலாம்:
இறுதிப்போர் காலங்களில் சரணடைந்தோர். பஸ்களில் ஏற்றப்பட்டு மறைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டோர்,
தமது வீடுகளிலும் தடுப்பு முகாம்களிலும் இருந்து படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டோர்,
படையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்.
இன்று வரை 15000க்கு மேற்பட்டோர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். பெரும்பாலானவை பரணகம விசாரணை ஆணைக்குழுவில் அறிக்கையிடப்பட்டுள்ளன. சிலர் தமது உறவுகள் ஒப்படைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைக் கூட இனம் கண்டு தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு கத்தோலிக்க குருக்களும் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர். 2006 ஆம் ஆண்டில் காணாமல் போன அருட்தந்தை ஜிம்பிறவுன் (40). இவர் காணாமல் போவதற்கு முன்னைய நாள் பண்ணை இராணுவச் சோதனைச் சாவடியில் தரித்து நின்றதைப் பலர் பார்த்துள்ளார்கள். அடுத்து அருட்தந்தை பிரான்சிஸ் யோசவ் (77) இறுதியாக 07.05.2009 அன்று பஸ்சில் ஏற்றப்பட்டு கொண்டு போகப்பட்டதைப் பல மக்கள் கண்டுள்ளார்கள்.
11.காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சி பலரால் வரவேற்கப்பட்டாலும். காணாமல் போனோரின் வேண்டுகோளை இவ் அலுவலகம் நிறைவேற்றுமா என்பது கேள்விக்குரியதே. பதவியேற்ற அரசாங்கங்களும் முன்னைய ஜனாதிபதிகளும் படையினருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என வாக்குறுதியளித்த நிலையில் அனைத்தும் கண்துடைப்பாகவே கருதத்தோன்றுகிறது. காணாமல் போனோர் அலுவலகம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உருவாக்கப்படவேண்டும். எமது மக்கள் அரசியல் கைதிகளைத் தேடிப் நீண்டதூர பயணங்களை மேற்கொண்டு களைத்துப்போய்விட்டார்கள். இவ் அலுவலக அதிகாரிகள் போதுமான தகைமை உள்ளவர்களாகவும் சுதந்திரமாகச் செயற்படக் கூடிய நிலையும் உருவாக்கப்படவேண்டும்.
12.வடகிழக்குப் பகுதிகளின் நிலகீழ் நீர் வளத்தைப் பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளை தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு மாற்றீடாக பாரம்பரிய உள்ளுர் முயற்சிகளை ஊக்குவிக்கலாம். விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் இயற்கை முறையிலான விவசாயத்தையும் பாரம்பரிய விதைப் பாவனையையும் வளர்க்க ஆவண செய்யவேண்டும்.
13.இந்திய கடற்தொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறல் காரணமாக எமது கடல் வளமும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக எமது மக்கள் மிகக்கொடிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படவேண்டும்.
14.அரச பாடசாலைகளில் கத்தோலிக்க சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. வடபகுதியில் நிரப்பப்படவேண்டிய கத்தோலிக்க ஆசிரியர் இடைவெளிகள் நிரப்பப்படாதுள்ளது. சில பகுதிகளில் காணப்படும் கத்தோலிக்க மத அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கற்பித்தலில் தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களை உள்வாங்குவதன் மூலம் இப்பிரச்சினைக்காக தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட சமூகமாகிய எம்மால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட விடயங்களை சீர்தூக்கிப் பார்த்து குறுகிய கால எல்லையில் முன்னேடுக்கப்படவேண்டியவை, நீண்டகால எல்லையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை எனப் பகுப்பாய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
ஆயுதப் போராட்டம் மௌணிக்கப்பட்டதன் பின்னர் பல அரசாங்கங்கள் வந்து போயுள்ளன ஆனால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, சில பிரச்சினைகள் மேலும் மோசமடைந்துள்ளது. எமது நாட்டின் இந்நிலைக்குக் காரணமான அடிப்படையான, அடிவேரான காரணிகளை இனம்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு பல அரசாங்கங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்படாது போயுள்ளதை நினைத்து வருந்துகிறோம். தமிழ் மக்களின் குரல்கள் மௌனிக்கப்படுவதாலும், பொறுப்புக்கூறல் சரிவர முன்னெடுக்கப்படாமலும் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமலும் நாட்டில் அமைதியும் ஒன்றிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் நம்புகிறோம்.
வடக்குக் கிழக்கு மக்களுடைய நீண்டகால பிணக்குகள் தீர்க்கப்பட்டு செயலில் காட்டப்படுவதன் மூலமே நீடித்த நிலையான அமைதியும் ஒருமைப்பாடும் எமது நாட்டிற்குக் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி நிற்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் இன மத ஒருமைப்பாட்டை வளர்க்க வழியேற்படுத்துங்கள். ஜனாதிபதிக்கு சர்வமத குழுவினர் மகஜர்.samugammedia நாட்டில் இன மத ஒருமைப்பாட்டை வளர்க்க ஆவண செய்யுமாறு யாழ்ப்பாண சர்வமதக் குழுவினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றையதினம் யாழில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.குறித்த சந்திப்பின் பின்னர் யாழ்ப்பாண சர்வமதக் குழுமத்தினரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட மகஜரிலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,சர்வமதப் பிரதிநிதிகளாகிய நாம் இலங்கை ஜனாதிபதியாகிய உங்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களாகிய எமது கோரிக்கைகள் மீதான கரிசனையை தெரிவித்துக்கொள்ள விளைகின்றோம்.2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகள் பாரிய அளவில் போதுமானதாக அமையவில்லை. தமிழ் மக்கள் வேதனையோடு அனுபவித்து வந்த பாகுபாடுகள் எவ்விதமான விவாதமும் இன்றி தொடர்ந்து வருகின்றது. இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாது எம் மக்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள். போர்க் காலங்களிலும் போருக்குப் பிற்பட்ட காலங்களிலும் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த துன்பங்கள், மன உளைச்சல்களோடு வாழ்ந்த மக்கள் மேலும் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடிகளால் எதிர்பாராத வறுமை நிலைக்கும் வேலை இழப்பிற்கும் ஆளாகித் தவிக்கின்றார்கள்.இலங்கை ஜனாதிபதியாகிய உங்களின் உடனடியான, அதிதீவிரமான கவனத்திற்குப் பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகின்றோம்:1. எமது நாட்டில் இன மத ஒருமைப்பாட்டை வளர்க்க ஆவண செய்யுமாறு வேண்டுகின்றோம். ஒவ்வோரு மதத்திலும் இனக் குழுமத்திலும் காணப்படும் ஒரு சில விடயங்கள் இன, மத ஒருமைப்பாட்டை சிதைக்க வல்லனவாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே இவ்வாறான எதிர்மறையான விடயங்களை இனங்கண்டு களைவதன் மூலம் எமது நாட்டின் இனமத ஒருமைப்பாட்டை இவ்வாறான குறுகிய மனப்பான்மையுள்ளவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.2. அனைத்து மத, இன மக்களும் தமது அடிப்படை உரிமையை அனுபவிக்கக் கூடியதாக இருக்கவேண்டும். எமது நாடானது பல்லின, பல் சமய மக்களைக் கொண்ட நாடாக இருக்கிறது. இலங்கை அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள முதன்மை நிலையானது பன்மைத் தன்மைக்கு எதிரானதாக அமைகிறது. சிங்கள பௌத்த மேலாதிக்கவாதமானது இந்நாட்டில் ஆயுதப் போரானது பல ஆண்டுகளாக தொடருவதற்கு காரணியாக அமைந்தது. இந்நிலையானது இன்றும் தொடருவதைக் காணக்கூடியவாறு இருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் ஏனைய இனக் குழுமங்களை, மதங்களைவிட சிங்கள பௌத்தமே மேலானது என்பதை பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக தெரிவிப்பதும் வேதனையளிக்கின்றது. இலங்கை அரசும், அரச நிறுவனங்களும் எமது நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தமது மத நம்பிக்கையை, அனுஸ்டானங்களை எவ்வித பயமும் இன்றி சுதந்திரமாகக் கடைப்பிடிக்க வழி ஏற்படுத்தப்படவேண்டும்.3. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் குழுமங்களுக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளையும் தமிழர் வாழ் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவதையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியதும், வன்முறையை உருவாக்கக் கூடியதுமான உரைகளை நிகழ்த்தும் சிங்கள அரசியல்வாதிகள் பௌத்த மதத்தலைவர்கள் மீது இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான தொடர்ச்சியான செயற்பாடுகள் மதங்களுக்கிடையில் பிரிவினைகளையும் குரோதங்களையும் உருவாக்கும். பௌத்த மத நம்பிக்கையாளர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள், விகாரைகள் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்போடும் தொல்பொருள் திணைக்களாத்தின் அனுசரணையுடனும் கட்டப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மிகப் புராதண இந்து ஆலயத்திற்கருகில் நயினாதீவில் கட்டப்படும் புத்த சிலை, கொக்கிளாயில் தனியார் காணியில் கட்டப்படும் புத்த சிலை, விகாரை, இரணைமடுக் குளப்பகுதியில் இந்து ஆலயத்திற்கு அருகில் கட்டப்படும் புத்த சிலை என்பன ஒரு சில எடுத்துக்காட்டுக்களாகும். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் அவ்விடங்களில் வாழ முடியாத நிலையையும், தமது மதத்தைப் பின்பற்ற முடியாத நிலையையும் தொடர்ச்சியான காலநித்துவ சூழமைவையும் உருவாக்குகிறது. 4. போர்க் காலங்களில் தமது இடங்களிலிருந்து துரத்தப்பட்ட வடபகுதி முஸ்லிம் சமூகத்தவர்கள் தமது இடங்களில் மீளக்குடியமர வழிசெய்யப்படவேண்டும். இவர்களது காணிப் பிணக்குகள் சீர்செய்யப்படவேண்டும். ஆண்களுக்கான ஒரு முஸ்லிம் பாடசாலையும், பெண்களுக்கான ஒரு முஸ்லிம் பாடசாலையும் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னேடுக்க அரசாங்கம் உதவி செய்யவேண்டும்.5. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரச அதிகாரிகளாலும் பாதுகாப்புப் படையினராலும் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகள் உடனடியாக மீளக்கையளிக்கப்பட வேண்டும். காணிகள் மீளக்கையளிக்கப்படாமையால் பல இந்து ஆலயங்களில் பல தசாப்தங்களாக பூஜை வழிபாடுகள் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சில கோவில்களை விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பார்க்க மட்டுமே கூடியதாக இருக்கிறது.மயிலிட்டி கடற்கரைப் பகுதி, அதனை அண்டியுள்ள வளமான நிலப்பகுதி, மயிலிட்டி துறைமுகம் (ஒரு காலத்தில் இலங்கை மீன் உற்பத்தியில் 40 சதவீதமான மீனைப் பெற்றுக்கொடுத்த பகுதி), ஏனைய பகுதிகளில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏறத்தாழ 15000-20000 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்ட பரவிப்பாஞ்சான், கேப்பாப்பிளவு நிலங்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.6. போரின் இறுதி நாட்களில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சார்பான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தவர்களை கண்டறியுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்விடயம் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒரு சில தேசிய பொறிமுறைகள் எதிர்பார்க்கப்பட்ட நேர்மறையான விளைவுகளைத் தரவில்லை, யாரையும் பொறுப்புக்கூறும் நிலையை உருவாக்கவில்லை. எனவே, சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் (நீதிபதிகள், விசாரணையாளர்கள்) சட்ட மீறல்களை விசாரணைசெய்து பொறுப்புக் கூறலை துரிதப்படுத்த வலியுறுத்துகிறோம். எடுத்துக் காட்டாக: 2006 இல் திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட ஐந்து இளைஞர்கள், மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தன்னார்வப் பணியாளர்கள்.போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்யுமாறு வலியுறுத்துகிறோம். எமக்குக் கிடைத்த தரவுகளுக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 104 பாடசாலைகளில் 585 சிறுவர்கள் இரு பெற்றோர்களையும் இழந்த நிலையிலும், ஒரு பெற்றோரை இழந்தோர் தொகை இன்னும் அதிகமாக இருப்பதையும் காணலாம். அதே மாவட்டத்தில் 444 சிறுவர்கள் விஷேடதேவையுடையவர்களாகவும், மேலும் 900-1000 வரையான சிறுவர்களின் உடல்களில் வெடிச்சிதறல்களும் nஷல் சிதறல்களும் காணப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.7. போதைப் பொருள் பாவனை தொடர்பான விடயங்களில் நேர்மையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இது சார்பான விழிப்புணர்வை இளையோருக்கு வழங்கி தேவையில் இருப்போருக்கு விருப்ப சிகிச்சைக்கு வழிசமைத்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த உதவிகள் வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை சிறையிலடைத்தல், இராணுவ புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புதல் போன்ற செயற்பாடுகள் அவர்களை மேலும் அந்நியப் படுத்துவதோடு உதவி நாடுவதையும் தடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.8. வடக்கில் காணப்படும் தன்னார்வப் போதை புனர்வாழ்வு மையங்களின் குறைபாடு தேவையில் உள்ளோருக்கு பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது. பொது மக்கள் அனுகக்கூடிய விதமான இடங்களில் பொதுச் சுகாதார அமைச்சும், சமூக மேம்பாட்டு அமைச்சும் இணைந்து புனர்வாழ்வு நிலையங்களை அமைக்கவேண்டும். 9. அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்துகிறோம். இவர்களுள் சிலர் 15-20 வருடங்களாக சிறையில் வாடுகிறார்கள். வவுனியாவைச் சேர்ந்த திரு. விமலறூபன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. டில்றுக்ஷன் போன்ற அரசியல் கைதிகள் கொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துவிட்டது. இறந்த இருவரோடு பல கைதிகள் தங்களை வவுனியா சிறைச்சாலையிலிருந்து தென்பகுதிச் சிறைகளுக்கு மாற்ற வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்தவேளை பலர் சிறைக் காவலர்களாலும் ஏனைய கைதிகளாலும் தாக்கப்பட்டு பலத்த காயங்களோடு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இவர்களது குடும்பங்களுக்கு எவ்விதமான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை, இறப்புச் சான்றிதழ்களும் கொடுக்கப்படவில்லை. மிகக் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்துகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் மாற்றீடாக உருவாக்கப்படும் சட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையின் பிரகாரம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் படி உருவாக்கப்பட வேண்டும்.10. காணாமல் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக பல காலங்களாக கேள்வி எழுப்பப்பட்ட போதும் எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. இடைக்கால நஸ்டஈடு வழங்கும் முயற்சியானது இவர்களின் நேரிய தேடலை குறைத்து மதிப்பிடும் முயற்சியாகவும் அதேவேளை அரசாங்கமானது இவர்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய பணியிலிருந்து தப்பிக்கொள்ளும் வழியாகவும் கருதப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் அமைதிப் போராட்டங்கள் பாதுகாப்புப் படையினராலும் காவல்துறையினராலும் வன்முறையால் அடக்கப்படுவதையும் நிறுத்த வேண்டும். இவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதையும், பயமுறுத்தப் படுவதையும், கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் இவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவை சீர்குலைக்க ஏதுவாக அமைகிறது.முன்று வகையான காணாமல் போனோர், ஆக்கப்பட்டோரைப் பகுக்கலாம்: இறுதிப்போர் காலங்களில் சரணடைந்தோர். பஸ்களில் ஏற்றப்பட்டு மறைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டோர், தமது வீடுகளிலும் தடுப்பு முகாம்களிலும் இருந்து படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டோர், படையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர்.இன்று வரை 15000க்கு மேற்பட்டோர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர். பெரும்பாலானவை பரணகம விசாரணை ஆணைக்குழுவில் அறிக்கையிடப்பட்டுள்ளன. சிலர் தமது உறவுகள் ஒப்படைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைக் கூட இனம் கண்டு தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு கத்தோலிக்க குருக்களும் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர். 2006 ஆம் ஆண்டில் காணாமல் போன அருட்தந்தை ஜிம்பிறவுன் (40). இவர் காணாமல் போவதற்கு முன்னைய நாள் பண்ணை இராணுவச் சோதனைச் சாவடியில் தரித்து நின்றதைப் பலர் பார்த்துள்ளார்கள். அடுத்து அருட்தந்தை பிரான்சிஸ் யோசவ் (77) இறுதியாக 07.05.2009 அன்று பஸ்சில் ஏற்றப்பட்டு கொண்டு போகப்பட்டதைப் பல மக்கள் கண்டுள்ளார்கள்.11. காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சி பலரால் வரவேற்கப்பட்டாலும். காணாமல் போனோரின் வேண்டுகோளை இவ் அலுவலகம் நிறைவேற்றுமா என்பது கேள்விக்குரியதே. பதவியேற்ற அரசாங்கங்களும் முன்னைய ஜனாதிபதிகளும் படையினருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என வாக்குறுதியளித்த நிலையில் அனைத்தும் கண்துடைப்பாகவே கருதத்தோன்றுகிறது. காணாமல் போனோர் அலுவலகம் வடக்கு கிழக்குப் பகுதிகளில் உருவாக்கப்படவேண்டும். எமது மக்கள் அரசியல் கைதிகளைத் தேடிப் நீண்டதூர பயணங்களை மேற்கொண்டு களைத்துப்போய்விட்டார்கள். இவ் அலுவலக அதிகாரிகள் போதுமான தகைமை உள்ளவர்களாகவும் சுதந்திரமாகச் செயற்படக் கூடிய நிலையும் உருவாக்கப்படவேண்டும்.12. வடகிழக்குப் பகுதிகளின் நிலகீழ் நீர் வளத்தைப் பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளை தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு மாற்றீடாக பாரம்பரிய உள்ளுர் முயற்சிகளை ஊக்குவிக்கலாம். விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன் இயற்கை முறையிலான விவசாயத்தையும் பாரம்பரிய விதைப் பாவனையையும் வளர்க்க ஆவண செய்யவேண்டும்.13. இந்திய கடற்தொழிலாளர்களின் தொடர்ச்சியான அத்துமீறல் காரணமாக எமது கடல் வளமும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக எமது மக்கள் மிகக்கொடிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காணப்படவேண்டும். 14. அரச பாடசாலைகளில் கத்தோலிக்க சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. வடபகுதியில் நிரப்பப்படவேண்டிய கத்தோலிக்க ஆசிரியர் இடைவெளிகள் நிரப்பப்படாதுள்ளது. சில பகுதிகளில் காணப்படும் கத்தோலிக்க மத அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் கற்பித்தலில் தேர்ச்சி பெற்றிருப்பதால் அவர்களை உள்வாங்குவதன் மூலம் இப்பிரச்சினைக்காக தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.பாதிக்கப்பட்ட சமூகமாகிய எம்மால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள மேற்கூறப்பட்ட விடயங்களை சீர்தூக்கிப் பார்த்து குறுகிய கால எல்லையில் முன்னேடுக்கப்படவேண்டியவை, நீண்டகால எல்லையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டியவை எனப் பகுப்பாய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். ஆயுதப் போராட்டம் மௌணிக்கப்பட்டதன் பின்னர் பல அரசாங்கங்கள் வந்து போயுள்ளன ஆனால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை, சில பிரச்சினைகள் மேலும் மோசமடைந்துள்ளது. எமது நாட்டின் இந்நிலைக்குக் காரணமான அடிப்படையான, அடிவேரான காரணிகளை இனம்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு பல அரசாங்கங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தும் பயன்படுத்தப்படாது போயுள்ளதை நினைத்து வருந்துகிறோம். தமிழ் மக்களின் குரல்கள் மௌனிக்கப்படுவதாலும், பொறுப்புக்கூறல் சரிவர முன்னெடுக்கப்படாமலும் தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமலும் நாட்டில் அமைதியும் ஒன்றிப்பும் ஏற்படப் போவதில்லை என்பதை நாம் நம்புகிறோம்.வடக்குக் கிழக்கு மக்களுடைய நீண்டகால பிணக்குகள் தீர்க்கப்பட்டு செயலில் காட்டப்படுவதன் மூலமே நீடித்த நிலையான அமைதியும் ஒருமைப்பாடும் எமது நாட்டிற்குக் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி நிற்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.