தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதற்கமைய, நேற்று திங்கட்கிழமை (20) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை (21) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தனியார் வங்கி பெயரில் போலி இணையதளம்: 10 இலட்சம் மோசடி இளைஞன் கைது தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதற்கமைய, நேற்று திங்கட்கிழமை (20) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை (21) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.