இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், 42 வயதான தனது தாயை 17 வயது சிறுவன் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லக்னோவின் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒக்டோபர் 1ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலினத்தை பெண்ணாக மாற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள சிறுவன் விரும்பியதாகவும், இதற்கு குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின்படி, சிறுவன் கடந்த சில காலமாக குடும்பத்தினரிடமிருந்து தனியாக வசித்து வந்துள்ளார். பாலின அடையாளம் மற்றும் அதுதொடர்பான சிகிச்சை குறித்து குடும்பத்தில் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தாயை சந்திக்க வீட்டுக்கு வந்த சிறுவனுக்கும், தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறுவன் இரும்பு கருவியால் தாயின் தலையில் தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பின்னர் சிறுவனே பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை காவலில் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கருவி உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சிறுவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பு மற்றும் கைபேசி உள்ளிட்டவற்றையும் விசாரணைக் குழு ஆய்வு செய்து வருகிறது.
கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்திய தகவலின்படி, கொலைக்கு முன்னதாக சில பொருட்களை வாங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலின மாற்று சிகிச்சை விவகாரத்தில் குடும்பத் தகராறு-தாயை கொன்ற சிறுவன் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், 42 வயதான தனது தாயை 17 வயது சிறுவன் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லக்னோவின் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒக்டோபர் 1ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலினத்தை பெண்ணாக மாற்றுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள சிறுவன் விரும்பியதாகவும், இதற்கு குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின்படி, சிறுவன் கடந்த சில காலமாக குடும்பத்தினரிடமிருந்து தனியாக வசித்து வந்துள்ளார். பாலின அடையாளம் மற்றும் அதுதொடர்பான சிகிச்சை குறித்து குடும்பத்தில் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று தாயை சந்திக்க வீட்டுக்கு வந்த சிறுவனுக்கும், தாய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறுவன் இரும்பு கருவியால் தாயின் தலையில் தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துக்குப் பின்னர் சிறுவனே பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும், பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை காவலில் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரும்புக் கருவி உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சிறுவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பு மற்றும் கைபேசி உள்ளிட்டவற்றையும் விசாரணைக் குழு ஆய்வு செய்து வருகிறது.கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்திய தகவலின்படி, கொலைக்கு முன்னதாக சில பொருட்களை வாங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.