நல்லூரானை தேரில் காண சென்ற குடும்பத்தினர் ஒருவரது வீட்டிற்குள் கும்பலொன்று நுழைந்து தீ வைத்துள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் புடைசூழ இன்று இடம்பெற்றது.
நல்லூரானைத் தேரில் காண நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
குறித்த வீட்டார் சென்ற பின்னர் அதிகாலை வேளை வீட்டிற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்து புகை வருவதனை ஆலயத்திலிருந்து அவதானித்தவர்கள், அயலவர்களுக்கு அறிவித்து அயலவர்களுடன் இணைந்து தீயினை அணைத்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து , ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பினர். வீட்டில் சென்ற பார்த்த போதே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
அதனையடுத்து வீட்டார் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் தேருக்கு சென்ற குடும்பம்; வீட்டிற்குள் நுழைந்து தீ வைத்த விஷமிகள் நல்லூரானை தேரில் காண சென்ற குடும்பத்தினர் ஒருவரது வீட்டிற்குள் கும்பலொன்று நுழைந்து தீ வைத்துள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் புடைசூழ இன்று இடம்பெற்றது. நல்லூரானைத் தேரில் காண நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர் இன்றைய தினம் காலை நல்லூர் தேர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். குறித்த வீட்டார் சென்ற பின்னர் அதிகாலை வேளை வீட்டிற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்து புகை வருவதனை ஆலயத்திலிருந்து அவதானித்தவர்கள், அயலவர்களுக்கு அறிவித்து அயலவர்களுடன் இணைந்து தீயினை அணைத்துள்ளனர். சம்பவத்தை அறிந்து , ஆலயத்திற்கு சென்ற வீட்டாரும் வீடு திரும்பினர். வீட்டில் சென்ற பார்த்த போதே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. அதனையடுத்து வீட்டார் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.