யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ். ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று திடீரென மயக்க முற்றுள்ளார்.
இதனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற் கூற்றுப்பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் நிமோனியா காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் பரிதாப மரணம். யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ். ஆனைக்கோட்டை சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் நிலவிய நிலையிலும் அவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெறாதிருந்துள்ளார்.இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று திடீரென மயக்க முற்றுள்ளார். இதனையடுத்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற் கூற்றுப்பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் நிமோனியா காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.