• Jul 01 2024

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்படும் கந்தளாய் விவசாயிகள்...!

Sharmi / Jun 29th 2024, 2:46 pm
image

Advertisement

கந்தளாய் அக்போபுர பிரதேச மினிப்புற பகுதியில் காட்டு யானைகளினால் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தோட்டங்களைச் சுற்றி யானை வேலிகள் இல்லாத காரணத்தால் தினமும் காட்டு யானைகள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இன்று ( 29 ) அதிகாலையில் எட்டுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தென்னை, வாழை, மரவள்ளி கிழங்கு போன்ற உள்ளிட்ட பல பயிர்களை நாசம் செய்துள்ளது.

மேலும், பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட நீர் குளாய்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் பசுமாடுகளுக்கு பயன்படுத்தப்படும் புன்னாக்கு மூட்டைகளையும் தின்றுவிட்டதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்படும் கந்தளாய் விவசாயிகள். கந்தளாய் அக்போபுர பிரதேச மினிப்புற பகுதியில் காட்டு யானைகளினால் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் தோட்டங்களைச் சுற்றி யானை வேலிகள் இல்லாத காரணத்தால் தினமும் காட்டு யானைகள் வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இன்று ( 29 ) அதிகாலையில் எட்டுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தென்னை, வாழை, மரவள்ளி கிழங்கு போன்ற உள்ளிட்ட பல பயிர்களை நாசம் செய்துள்ளது.மேலும், பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட நீர் குளாய்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் பசுமாடுகளுக்கு பயன்படுத்தப்படும் புன்னாக்கு மூட்டைகளையும் தின்றுவிட்டதாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

Advertisement

Advertisement

Advertisement