• Jan 24 2025

நெல்லுக்காக உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை

Chithra / Jan 24th 2025, 1:30 pm
image



நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும் நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதன் விளைவாக ஒரு கிலோ நெல்லின் விலை 110 முதல் 120 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.

உத்தரவாத விலையை நிர்ணயிக்காததுடன் அரசாங்கம் இன்னும் நெல் கொள்முதல் செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை.

அதனால் தனது அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

எனவே நெல்லுக்கு உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்க வேண்டும் என அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வட்டுஹேவா தெரிவித்தார்.

திருகோணமலைப் பகுதியில் அறுவடையின் பின்னர்  நெல் தற்போது சந்தைக்கு வந்திருப்பதாகவும்,

அதன்படி, சிவப்பு நெல் ஒரு கிலோ 110 முதல் 120 ரூபா வரையிலும் மற்ற வகை நெல் 110 முதல் 115 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லுக்காக உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை நெல் அறுவடை சந்தையை வந்தடைந்தாலும் நெல்லுக்கு உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதன் விளைவாக ஒரு கிலோ நெல்லின் விலை 110 முதல் 120 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் போராட்ட இயக்கம் தெரிவித்துள்ளது.உத்தரவாத விலையை நிர்ணயிக்காததுடன் அரசாங்கம் இன்னும் நெல் கொள்முதல் செய்யும் செயல்முறையை தொடங்கவில்லை.அதனால் தனது அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.எனவே நெல்லுக்கு உத்தரவாத விலையை அவசரமாக நிர்ணயிக்க வேண்டும் என அமைப்பின் தேசிய அமைப்பாளர் விமல் வட்டுஹேவா தெரிவித்தார்.திருகோணமலைப் பகுதியில் அறுவடையின் பின்னர்  நெல் தற்போது சந்தைக்கு வந்திருப்பதாகவும்,அதன்படி, சிவப்பு நெல் ஒரு கிலோ 110 முதல் 120 ரூபா வரையிலும் மற்ற வகை நெல் 110 முதல் 115 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement