• Apr 02 2025

தந்தை செல்வாவின் 127ஆவது ஜனன தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!

Sharmi / Mar 31st 2025, 11:25 am
image

வவுனியாவில் தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம் இன்று(31) அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரசந்திக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று(31) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் தந்தை செல்வா தொடர்பான நினைவுரையினை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நா.சேனாதிராஜா நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




தந்தை செல்வாவின் 127ஆவது ஜனன தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு. வவுனியாவில் தந்தை செல்வாவின் 127 ஆவது ஜனனதினம் இன்று(31) அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரசந்திக்கு அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று(31) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது தமிழரசுக் கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.அத்துடன் தந்தை செல்வா தொடர்பான நினைவுரையினை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நா.சேனாதிராஜா நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement