மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில், தந்தை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மயிலவெட்டுவான் ஊப்போடை வீதியைச் சோந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன் என்பவரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டையண்டிய பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக சம்பவதினமான காலை சென்றுள்ளனர் .
இதன்போது அங்கு யானையை கண்டு, தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து நீரிழ் மூழ்கிய 14 வயது சிறுவன் வெளியில் வந்த நிலையில் தந்தையார் நீரில் இருந்து வெளிவராததையிட்டு தேடிய போது, அவரை ஆற்று நீர் இழுத்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதையடுத்துஇ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசார் கடற்படை உதவியுடன் உறவினர்கள் அந்த ஆற்றுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியானாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யானையிடமிருந்து உயிர் தப்ப ஆற்றில் குதித்த தந்தை, மகன் - இறுதியில் நடந்த துயரம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில், தந்தை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.மயிலவெட்டுவான் ஊப்போடை வீதியைச் சோந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன் என்பவரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.குறித்த பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டையண்டிய பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக சம்பவதினமான காலை சென்றுள்ளனர் .இதன்போது அங்கு யானையை கண்டு, தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.இதனையடுத்து நீரிழ் மூழ்கிய 14 வயது சிறுவன் வெளியில் வந்த நிலையில் தந்தையார் நீரில் இருந்து வெளிவராததையிட்டு தேடிய போது, அவரை ஆற்று நீர் இழுத்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.பின்னர் சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளதையடுத்துஇ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதனையடுத்து பொலிசார் கடற்படை உதவியுடன் உறவினர்கள் அந்த ஆற்றுப் பகுதியில் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியானாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.