ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பினை மீளவும் உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கும் உரித்துடையவர் என தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழரசு கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மீளவும் ஒன்றிணைய வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளனர்.
இந்த ஒற்றுமைக்கான அறைகூவல் எதிர்வரும் தேர்தலை நோக்கியது மாத்திரமே. வெறுமனே தேர்தலுக்காக அதாவது எப்பாடுபட்டாவது நாடாளுமன்றம் செல்வதற்காக மாத்திரம் இவ்வாறு காட்டிக்கொள்வது போன்று மக்களுக்காக ஒற்றுமையாக செயற்படுவதற்கு இவர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராகுல புத்திரனின் வீட்டில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் மேதகு தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பினை பிரிப்பதற்கு ஆதரவாக இவர்கள் கை தூக்கிய போது இந்த ஒற்றுமைக்கான எண்ணம் தோன்றியிருக்கவேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பிரிக்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் மிகவும் ஆக்ரோசமாக வாதிட்டதோடு எதிர்த்தும் வாக்களித்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா மாத்திரமே. அவரே மீளவும் கூட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கும் உரித்துடையவர்.
இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதற்கான பிரேரணையை முன்மொழிந்தவர் தான் சங்கு சின்ன பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன். ஆனால் ஒற்றுமையை வலியுறுத்திய மக்கள் மனமறிந்த கே வி தவராசாவை திட்டமிட்டு புறக்கணித்துவிட்டு சொந்த ஊரிலேயே ஏற்கனவே இரண்டு தடவைகள் படுதோல்வியடைந்த அரியநேத்திரன் போன்ற ஆளுமையற்றவரை பொம்மை வேட்பாளராக சில குழுவினர் இணைந்து தெரிவு செய்து தமிழ் பொது வேட்பாளர் எனும் கொள்கையில் தோல்வி அடைந்திருந்தார்கள் என்பதனையும் தமிழ் மக்கள் அறிவார்கள் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
கூட்டமைப்பு இணைப்பு; தவராசாவுக்கு மாத்திரமே உரிமையுண்டு- இளைஞரணி செயலாளர் குணாளன் வலியுறுத்து. ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பினை மீளவும் உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கும் உரித்துடையவர் என தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழரசு கட்சியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மீளவும் ஒன்றிணைய வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளனர். இந்த ஒற்றுமைக்கான அறைகூவல் எதிர்வரும் தேர்தலை நோக்கியது மாத்திரமே. வெறுமனே தேர்தலுக்காக அதாவது எப்பாடுபட்டாவது நாடாளுமன்றம் செல்வதற்காக மாத்திரம் இவ்வாறு காட்டிக்கொள்வது போன்று மக்களுக்காக ஒற்றுமையாக செயற்படுவதற்கு இவர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய ராகுல புத்திரனின் வீட்டில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் மேதகு தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பினை பிரிப்பதற்கு ஆதரவாக இவர்கள் கை தூக்கிய போது இந்த ஒற்றுமைக்கான எண்ணம் தோன்றியிருக்கவேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பிரிக்கக் கூடாது என்று அக்கூட்டத்தில் மிகவும் ஆக்ரோசமாக வாதிட்டதோடு எதிர்த்தும் வாக்களித்தவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா மாத்திரமே. அவரே மீளவும் கூட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கும் உரித்துடையவர்.இன்னுமொரு வேடிக்கை என்னவெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிரிப்பதற்கான பிரேரணையை முன்மொழிந்தவர் தான் சங்கு சின்ன பொதுவேட்பாளர் பா. அரியநேந்திரன். ஆனால் ஒற்றுமையை வலியுறுத்திய மக்கள் மனமறிந்த கே வி தவராசாவை திட்டமிட்டு புறக்கணித்துவிட்டு சொந்த ஊரிலேயே ஏற்கனவே இரண்டு தடவைகள் படுதோல்வியடைந்த அரியநேத்திரன் போன்ற ஆளுமையற்றவரை பொம்மை வேட்பாளராக சில குழுவினர் இணைந்து தெரிவு செய்து தமிழ் பொது வேட்பாளர் எனும் கொள்கையில் தோல்வி அடைந்திருந்தார்கள் என்பதனையும் தமிழ் மக்கள் அறிவார்கள் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.