• Feb 07 2025

தம்பலகாமத்தின் இன நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்தும் களப்பயணம்

Thansita / Feb 6th 2025, 10:48 pm
image


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்  பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட்  (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில்   SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றது

SFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் பன்னிரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் முரண்பாடுகளை  சாதகமான  முறையில் நிலைமாற்றம் செய்தல்  மற்றும் வன்முறை அதிகரிப்பதைத் தடுத்தல் உள்ளூர் மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு வழிமுறைகளை வலுப்படுத்துதல்.போன்றவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. 

இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில்SFCG இணைந்து  விழுது ஆற்றல் மேம்பாடு மையம் இத் திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகிறது

இதன் தொடர்ச்சியாக தம்பலகாம பிரதேசம் பல் கலாசார பிரதேசதமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இன நல்லிணக்கமின்மை செயற்பாடுகள் அதிகரித்து வருவதால் இன  நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில்  தம்பலகாமாம்  ADR   குழு செயற்பட்டு வருகிறது.

இன்று (2025/02/06) திகதி மாற்றுவழி பிணக்கு தீர்வு குழுவினரின் ஏற்பாட்டில்  தம்பலகாம பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு சமயத்தவர்களின் வணகஸ்தலங்களின் கலை, கலாச்சார, பண்பாடுகள், மற்றும்  பழக்கவழக்கங்கள்  அவர்களுடைய இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் என்பற்றை அறிந்து கொள்ள  முள்ளிப்பொத்தானை 96ல் அமைந்துள்ள ஸ்ரீ அக்ரபோதி பௌத்த விகாரை  , Our Lady of Perpetual Help Church, பள்ளிவாயல்  தம்பலகாமம் ஆதி கோணஸ்வர ஆலயம் என்பவற்றுக்கு 

பௌத்த ,இந்து, இஸ்லாமிய ,கிறிஸ்தவ மதத் தலைவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து மத நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் தம்பலகாம  மன்ற குழுவினர் ஒவ்வொரு சமூகத்தின் கலாசார விடயங்களை கற்று கொண்டதோடு இன  நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். 

அத்தோடு எதிர்காலத்தில் அனைத்து சமய தலைவர்களையும் ஒன்றினைத்து தம்பலகாம பிரதேசத்தில் இன நல்லிணக்க குழுவை உருவாக்குவதாக இதன் போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


தம்பலகாமத்தின் இன நல்லிணக்க செயற்பாட்டை மேம்படுத்தும் களப்பயணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்  பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட்  (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில்   SEDR திட்டமானது செயற்படுத்தப்படுகின்றதுSFCG திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் இலக்கு வைக்கப்பட்ட ஆறு மாவட்டங்கள் மற்றும் பன்னிரண்டு பிரதேச செயலக பிரிவுகளில் முரண்பாடுகளை  சாதகமான  முறையில் நிலைமாற்றம் செய்தல்  மற்றும் வன்முறை அதிகரிப்பதைத் தடுத்தல் உள்ளூர் மட்ட மாற்றுவழி பிணக்கு தீர்வு வழிமுறைகளை வலுப்படுத்துதல்.போன்றவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில்SFCG இணைந்து  விழுது ஆற்றல் மேம்பாடு மையம் இத் திட்டத்தை  நடைமுறைப்படுத்தி வருகிறதுஇதன் தொடர்ச்சியாக தம்பலகாம பிரதேசம் பல் கலாசார பிரதேசதமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இன நல்லிணக்கமின்மை செயற்பாடுகள் அதிகரித்து வருவதால் இன  நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில்  தம்பலகாமாம்  ADR   குழு செயற்பட்டு வருகிறது.இன்று (2025/02/06) திகதி மாற்றுவழி பிணக்கு தீர்வு குழுவினரின் ஏற்பாட்டில்  தம்பலகாம பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு சமயத்தவர்களின் வணகஸ்தலங்களின் கலை, கலாச்சார, பண்பாடுகள், மற்றும்  பழக்கவழக்கங்கள்  அவர்களுடைய இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் என்பற்றை அறிந்து கொள்ள  முள்ளிப்பொத்தானை 96ல் அமைந்துள்ள ஸ்ரீ அக்ரபோதி பௌத்த விகாரை  , Our Lady of Perpetual Help Church, பள்ளிவாயல்  தம்பலகாமம் ஆதி கோணஸ்வர ஆலயம் என்பவற்றுக்கு பௌத்த ,இந்து, இஸ்லாமிய ,கிறிஸ்தவ மதத் தலைவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து மத நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் தம்பலகாம  மன்ற குழுவினர் ஒவ்வொரு சமூகத்தின் கலாசார விடயங்களை கற்று கொண்டதோடு இன  நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். அத்தோடு எதிர்காலத்தில் அனைத்து சமய தலைவர்களையும் ஒன்றினைத்து தம்பலகாம பிரதேசத்தில் இன நல்லிணக்க குழுவை உருவாக்குவதாக இதன் போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement