மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
எனினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
இது குறித்த இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏப்ரல் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என தெரிவத்தார்.
இக்கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் குறித்து விளக்கமளித்தார்,
மார்ச் 24, 25 ஆம் திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராத காரணத்தால், சுத்திகரிப்பு நிலையத்தை மார்ச் 25 வரை மாத்திரமே இயக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான 'நெப்தா' மற்றும் 'எரி எண்ணெய்' ஆகியவற்றை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 12, 13 ஆம் திகதிகளில் எரி எண்ணெய் கப்பல் வரவுள்ள போதிலும், அதுவரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக விலை கொண்ட டீசலையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் இரவு நேர மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய டீசல் மாத்திரமே பயன்படுத்தப்படும்.
இந்த நெருக்கடி நிலையைக் கையாள பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் அத்தியாவசியமற்ற மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தைச் சேமியுங்கள்,குறிப்பாக வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைப்பதற்கும், தேவையற்ற நுகர்வைக் குறைப்பதற்கும் பொதுமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
மின் கட்டண அதிகரிப்பு குறித்து விரைவில் இறுதி முடிவு: நுகர்வைக் குறைக்குமாறு அவசர வேண்டுகோள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.உலக சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.எனினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களின் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.இது குறித்த இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏப்ரல் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என தெரிவத்தார்.இக்கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் குறித்து விளக்கமளித்தார்,மார்ச் 24, 25 ஆம் திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராத காரணத்தால், சுத்திகரிப்பு நிலையத்தை மார்ச் 25 வரை மாத்திரமே இயக்க முடியும். இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான 'நெப்தா' மற்றும் 'எரி எண்ணெய்' ஆகியவற்றை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏப்ரல் 12, 13 ஆம் திகதிகளில் எரி எண்ணெய் கப்பல் வரவுள்ள போதிலும், அதுவரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக விலை கொண்ட டீசலையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் இரவு நேர மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய டீசல் மாத்திரமே பயன்படுத்தப்படும்.இந்த நெருக்கடி நிலையைக் கையாள பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் அத்தியாவசியமற்ற மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தைச் சேமியுங்கள்,குறிப்பாக வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைப்பதற்கும், தேவையற்ற நுகர்வைக் குறைப்பதற்கும் பொதுமக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.