• Nov 28 2024

விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு குறித்து நிதியமைச்சு விளக்கம்!

Tamil nila / Oct 19th 2024, 7:45 am
image

5 வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

 வரி நீடிப்பு மாத்திரமே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மேலும் இந்த நீட்டிக்கப்பட்ட வரி விகிதங்கள் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதனூடாக, அரசாங்கத்தினால் புதிதாக வரி விதிப்பு ஒன்று மேற்கொள்ளவில்லை எனவும், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 25 சதவீத மானிய வரி அவ்வாறே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மீன்பிடித் தொழிலையும், பழ விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், அந்நிய செலாவணியைக் கருத்தில் கொண்டு ஏனைய 4 பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரி விதிப்புக்கள் அதே போன்று நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.


விசேட வர்த்தக பண்ட வரி அறவீடு குறித்து நிதியமைச்சு விளக்கம் 5 வகையான பொருட்களுக்குப் புதிய விசேட வர்த்தகப் பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  வரி நீடிப்பு மாத்திரமே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நீட்டிக்கப்பட்ட வரி விகிதங்கள் டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனூடாக, அரசாங்கத்தினால் புதிதாக வரி விதிப்பு ஒன்று மேற்கொள்ளவில்லை எனவும், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 25 சதவீத மானிய வரி அவ்வாறே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு மீன்பிடித் தொழிலையும், பழ விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில், அந்நிய செலாவணியைக் கருத்தில் கொண்டு ஏனைய 4 பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரி விதிப்புக்கள் அதே போன்று நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement