யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் சபையின் உறுப்பினர் ஒருவரை அவதூறான முறையில் சபையிலிருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வருமானப் பரிசோதகர், உறுப்பினர் ஒருவரை அடாவடித்தனமான முறையில் வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இதன்போது, "உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்?" என உறுப்பினர் வினவியபோது, சபையின் செயலாளரே தமக்கு அனுமதி வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.
மேலும், "செயலாளர் எதனைக் கூறினாலும் அதனை நிறைவேற்றுவதே எனது கடமை" என அந்த உத்தியோகத்தர் சபையில் வாதிட்டுள்ளார்.
தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உறுப்பினர்:
"பிரதேச சபை சட்ட விதிமுறைகளின்படி, ஒரு உத்தியோகத்தர், உறுப்பினர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்ற ஒழுக்கநெறி உள்ளது. சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி இருக்கின்றதா? அப்படி அனுமதி இருந்தாலும், உறுப்பினர்களை வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா? சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய செயலாளரே இத்தகைய செயல்களுக்குத் துணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
குறித்த அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் அவர்களுக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் ஆளுநர், வடக்கு மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இணையம் ஊடாக நிதி மோசடிகள் - இலங்கையில் அடுத்தடுத்து சிக்கும் வெளிநாட்டு கும்பல் யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் சபையின் உறுப்பினர் ஒருவரை அவதூறான முறையில் சபையிலிருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் அவருக்குத் துணையாகச் செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.அண்மையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அங்கு வந்த வருமானப் பரிசோதகர், உறுப்பினர் ஒருவரை அடாவடித்தனமான முறையில் வெளியேறுமாறு கூறியுள்ளார். இதன்போது, "உங்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்" என உறுப்பினர் வினவியபோது, சபையின் செயலாளரே தமக்கு அனுமதி வழங்கியதாக அந்த உத்தியோகத்தர் பதிலளித்துள்ளார்.மேலும், "செயலாளர் எதனைக் கூறினாலும் அதனை நிறைவேற்றுவதே எனது கடமை" என அந்த உத்தியோகத்தர் சபையில் வாதிட்டுள்ளார். தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உறுப்பினர்:"பிரதேச சபை சட்ட விதிமுறைகளின்படி, ஒரு உத்தியோகத்தர், உறுப்பினர்களுடன் எவ்வாறு உரையாட வேண்டும் என்ற ஒழுக்கநெறி உள்ளது. சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு அனுமதி இருக்கின்றதா அப்படி அனுமதி இருந்தாலும், உறுப்பினர்களை வெளியேறுமாறு பணிக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா சட்டங்களை நிலைநாட்ட வேண்டிய செயலாளரே இத்தகைய செயல்களுக்குத் துணையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.குறித்த அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் அவர்களுக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிரதிகள் ஆளுநர், வடக்கு மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.