• Mar 13 2025

கொழும்பிலுள்ள கடை ஒன்றில் திடீர் தீவிபத்து

Chithra / Mar 13th 2025, 10:13 am
image

 

கொழும்பு - புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

புறக்கோட்டை பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் அருகிலுள்ள கடை ஒன்றிலேயே இத் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

கொழும்பின் சனநெரிசல் மிக்க இடமொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் என்பதன் காரணமாக அதனைக் கட்டுப்படுத்துவதில் சற்று சிரமங்கள் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  

கொழும்பிலுள்ள கடை ஒன்றில் திடீர் தீவிபத்து  கொழும்பு - புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புறக்கோட்டை பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் அருகிலுள்ள கடை ஒன்றிலேயே இத் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பின் சனநெரிசல் மிக்க இடமொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் என்பதன் காரணமாக அதனைக் கட்டுப்படுத்துவதில் சற்று சிரமங்கள் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement