• Feb 12 2026

திருக்கோவிலில் வீடொன்றில் தீ விபத்து; பெறுமதிமிக்க பொருள்கள் நாசம்!

shanuja / Jan 16th 2026, 5:21 pm
image

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 கிழக்கு கனகர் கிராமம் ஆதவன் மைதான வீதியில் உள்ள வீடொன்றில்  பொங்கல் தினமான நேற்று மாலை  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


குறித்த தீ விபத்தில் வீட்டின் கூரை சேதமடைந்ததுடன் மற்றும் வீட்டின் அறையில் இருந்த பெரும் தொகையான தளபாடப்பொருட்களும்  தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. 


தீ விபத்தில் உயிர் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை என்பதுடன் குறித்த தீ விபத்துக்கான சரியான காரணமும் அறியப்படவில்லை. 


சம்பவ தினமான நேற்று தைத்திருநாள் என்பதனால் ஒருவர் மாத்திரம் வீட்டில் இருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீடொன்றிற்கு சென்றுள்ளனர். 


பின்னர் வீடு திரும்பிய வேளை வீடு தீவிபத்து ஏற்பட்டதை கண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். 


பின்னர் பொதுமக்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். 


குறித்த விபத்து தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


திருக்கோவிலில் வீடொன்றில் தீ விபத்து; பெறுமதிமிக்க பொருள்கள் நாசம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 கிழக்கு கனகர் கிராமம் ஆதவன் மைதான வீதியில் உள்ள வீடொன்றில்  பொங்கல் தினமான நேற்று மாலை  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்தில் வீட்டின் கூரை சேதமடைந்ததுடன் மற்றும் வீட்டின் அறையில் இருந்த பெரும் தொகையான தளபாடப்பொருட்களும்  தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. தீ விபத்தில் உயிர் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை என்பதுடன் குறித்த தீ விபத்துக்கான சரியான காரணமும் அறியப்படவில்லை. சம்பவ தினமான நேற்று தைத்திருநாள் என்பதனால் ஒருவர் மாத்திரம் வீட்டில் இருந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீடொன்றிற்கு சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய வேளை வீடு தீவிபத்து ஏற்பட்டதை கண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் பொதுமக்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். குறித்த விபத்து தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement