மீண்டும் எமது நாட்டில் வடக்கிலே தெற்கிலே கிழக்கிலோ நாட்டின் எந்தப் பகுதியிலும் சிங்களமா இருக்கட்டும், தமிழாக இருக்கட்டும், முஸ்லீமா இருக்கட்டும், எந்தவொரு இனவாதத்திற்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.
அதன் ஒருபகுதியாக "தமக்கான இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் குறித்த நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கணிசமான வாழ்வை யுத்தத்திற்கு மத்தியில் முரண்பாட்டுடன், சந்தேகத்தில், வைராக்கியத்துடன் வாழ்ந்தோம்.
தமிழ்மக்கள் மீது சிங்கள இனவாதிகள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். அதேபோன்று சிங்களமக்களை தமிழ்மக்கள் ஓர் சந்தேகத்துடன் பார்த்தார்கள். நீண்ட நாள் முரண்பாடு.
முறுகல்நிலையில் யுத்தத்தில் என்ன மிஞ்சியது. வீடுகள் இல்லாத குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், உறவினர்களை இழந்தார்கள், பொருளாதாரத்தை இழந்தார்கள்.
வடக்கிலும் தெற்கிலும் இரண்டு பகுதிகளாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தான் மிஞ்சினார்கள். அனைத்து அழிவுகளின் பின்னால் இருந்தது அரசியல் தான். அதிகாரத்தைப்பெற்றுக்கொள்ளும் தேவை.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள சிங்கள மக்களை உசுப்பேத்தினார்கள். பதவிகளுக்காக தமிழ்மக்களை உசுப்பேத்தினார்கள். இவ்வாறு இனவாத அரசியல் தான் காணப்பட்டது.
இன்றும் ஒரு தொல்பொருள்நிலையத்தை மையமாக வைத்து, மதஸ்தானத்தை வைத்து இனவாத முறுகல்நிலையை ஏற்படுத்த முனைகின்றார்கள்.
நான் ஒரு உறுதிமொழி வழங்குகின்றேன். மீண்டும் எமது நாட்டில் வடக்கிலே தெற்கிலே கிழக்கிலோ நாட்டின் எந்தப் பகுதியிலும் சிங்களமா இருக்கட்டும், தமிழாக இருக்கட்டும், முஸ்லீமா இருக்கட்டும், எந்தவொரு இனவாதத்திற்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாங்கள் அனைவருமே சகோதரர்கள், ஒற்றுமையாக வாழவேண்டும் எனத் தெரிவித்தார்.
மீண்டும் எமது நாட்டில் எந்தவொரு இனவாதத்திற்கும் இடமளிக்க மாட்டோம் - யாழில் ஜனாபதி உறுதிமொழி மீண்டும் எமது நாட்டில் வடக்கிலே தெற்கிலே கிழக்கிலோ நாட்டின் எந்தப் பகுதியிலும் சிங்களமா இருக்கட்டும், தமிழாக இருக்கட்டும், முஸ்லீமா இருக்கட்டும், எந்தவொரு இனவாதத்திற்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார். அதன் ஒருபகுதியாக "தமக்கான இடம் -அழகான வாழ்க்கை" தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார். அதன்பின்னர் குறித்த நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கணிசமான வாழ்வை யுத்தத்திற்கு மத்தியில் முரண்பாட்டுடன், சந்தேகத்தில், வைராக்கியத்துடன் வாழ்ந்தோம். தமிழ்மக்கள் மீது சிங்கள இனவாதிகள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். அதேபோன்று சிங்களமக்களை தமிழ்மக்கள் ஓர் சந்தேகத்துடன் பார்த்தார்கள். நீண்ட நாள் முரண்பாடு. முறுகல்நிலையில் யுத்தத்தில் என்ன மிஞ்சியது. வீடுகள் இல்லாத குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், உறவினர்களை இழந்தார்கள், பொருளாதாரத்தை இழந்தார்கள். வடக்கிலும் தெற்கிலும் இரண்டு பகுதிகளாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தான் மிஞ்சினார்கள். அனைத்து அழிவுகளின் பின்னால் இருந்தது அரசியல் தான். அதிகாரத்தைப்பெற்றுக்கொள்ளும் தேவை. அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள சிங்கள மக்களை உசுப்பேத்தினார்கள். பதவிகளுக்காக தமிழ்மக்களை உசுப்பேத்தினார்கள். இவ்வாறு இனவாத அரசியல் தான் காணப்பட்டது. இன்றும் ஒரு தொல்பொருள்நிலையத்தை மையமாக வைத்து, மதஸ்தானத்தை வைத்து இனவாத முறுகல்நிலையை ஏற்படுத்த முனைகின்றார்கள். நான் ஒரு உறுதிமொழி வழங்குகின்றேன். மீண்டும் எமது நாட்டில் வடக்கிலே தெற்கிலே கிழக்கிலோ நாட்டின் எந்தப் பகுதியிலும் சிங்களமா இருக்கட்டும், தமிழாக இருக்கட்டும், முஸ்லீமா இருக்கட்டும், எந்தவொரு இனவாதத்திற்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம். நாங்கள் அனைவருமே சகோதரர்கள், ஒற்றுமையாக வாழவேண்டும் எனத் தெரிவித்தார்.