• Dec 25 2024

கடற்றொழில் சட்டம்; அமைச்சரவையின் அனுமதியை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும்- அன்னராசா கோரிக்கை..!

Sharmi / Dec 24th 2024, 10:48 pm
image

கடற்றொழில் சட்டத்தின் ஊடாக நாட்டின் வளங்களை பல்தேசியக் கம்பனிகளுக்கு அன்னிய நாடுகளுக்கு வழங்குகின்ற அமைச்சரவையின் அனுமதியை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ் கொக்குவில் பகுதியில் இன்று மாலை நடத்திய ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை மீனவர் விவகாரத்தை தொடர விடாமல் கடந்த கால அரசாங்கம் நடந்து கொண்டவாறே இந்த புதிய அரசாங்கமும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது.

எனவே அவர்களை கைது செய்து விடுதலை செய்கின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். 

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி எமது தொழில் நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

கடற்றொழில் சட்டம்; அமைச்சரவையின் அனுமதியை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும்- அன்னராசா கோரிக்கை. கடற்றொழில் சட்டத்தின் ஊடாக நாட்டின் வளங்களை பல்தேசியக் கம்பனிகளுக்கு அன்னிய நாடுகளுக்கு வழங்குகின்ற அமைச்சரவையின் அனுமதியை இலங்கை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.யாழ் கொக்குவில் பகுதியில் இன்று மாலை நடத்திய ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய இலங்கை மீனவர் விவகாரத்தை தொடர விடாமல் கடந்த கால அரசாங்கம் நடந்து கொண்டவாறே இந்த புதிய அரசாங்கமும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்தாமல் இருக்கிறது.எனவே அவர்களை கைது செய்து விடுதலை செய்கின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி எமது தொழில் நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement