• May 06 2026

கடலுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் உடப்பு மீனவர்கள்; வாழ்வாதாரம் கேள்விக்குறி

Chithra / May 6th 2026, 11:01 am
image

புத்தளம், உடப்பு மீன்பிடி கிராமத்தில் தென்மேல் பருவக்காற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அப்பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.


பொதுவாக தென்மேல் பருவக்காற்று வீசும் காலங்களில் உடப்பு பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 


இதனால் இப்பகுதி மீனவர்கள் தமது மீன்பிடித் தொழில் காலத்தை இத்துடன் நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளனர்.


முன்னைய காலங்களில், இக்காலப்பகுதியில் உடப்பு மீனவர்கள் வடக்கு கடற்பரப்புகளுக்குச் சென்று தங்கி நின்று மீன்பிடித் தொழிலில் (வாடி அமைத்தல்) ஈடுபடுவது வழக்கம். இதன் மூலம் வருடத்தில் எஞ்சிய ஆறு மாத காலத்திற்கான வாழ்வாதாரத்தை அவர்கள் ஈடுகட்டி வந்தனர்.


இருப்பினும், தற்போது வடக்கு பகுதிக்குச் சென்று தொழில் செய்வதற்கு அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் மற்றும் மக்கள் அனுமதி மறுப்பதாக உடப்பு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் உடப்பு மீனவர்கள்; வாழ்வாதாரம் கேள்விக்குறி புத்தளம், உடப்பு மீன்பிடி கிராமத்தில் தென்மேல் பருவக்காற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், அப்பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.பொதுவாக தென்மேல் பருவக்காற்று வீசும் காலங்களில் உடப்பு பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் இப்பகுதி மீனவர்கள் தமது மீன்பிடித் தொழில் காலத்தை இத்துடன் நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளனர்.முன்னைய காலங்களில், இக்காலப்பகுதியில் உடப்பு மீனவர்கள் வடக்கு கடற்பரப்புகளுக்குச் சென்று தங்கி நின்று மீன்பிடித் தொழிலில் (வாடி அமைத்தல்) ஈடுபடுவது வழக்கம். இதன் மூலம் வருடத்தில் எஞ்சிய ஆறு மாத காலத்திற்கான வாழ்வாதாரத்தை அவர்கள் ஈடுகட்டி வந்தனர்.இருப்பினும், தற்போது வடக்கு பகுதிக்குச் சென்று தொழில் செய்வதற்கு அங்குள்ள உள்ளூர் மீனவர்கள் மற்றும் மக்கள் அனுமதி மறுப்பதாக உடப்பு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement