• Dec 03 2024

கிளிநொச்சியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் - மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயம்..!!

Tamil nila / Feb 21st 2024, 8:41 pm
image

கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஐவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது இந்த  தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஐவர் காயமடைந்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,,

இரு தரப்பினருக்கு இடையில்  வாக்குவாதம் முற்றியதால், எதிரே வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களில் வசிக்கும் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கிளிநொச்சியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் - மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயம். கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஐவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதாவது இந்த  தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஐவர் காயமடைந்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,,இரு தரப்பினருக்கு இடையில்  வாக்குவாதம் முற்றியதால், எதிரே வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.அத்துடன் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் பலத்த வெட்டுக்காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களில் வசிக்கும் மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement