• Jul 27 2024

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு!

Tamil nila / Feb 21st 2024, 9:06 pm
image

Advertisement

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின்  வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர்  எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று 2024.02.21 ஆம் திகதி இரு அமர்வுகளாக செயலமர்வுகள் இடம்பெற்றது.


குறித்த அமர்வுகளில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்துகொண்டு செயலமர்வின் நோக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

முதலாவது அமர்வு பல்கலைக்கழக கல்விசார் அணியினர்  மற்றும் உயர்கல்வியை தொடரவிரும்பும் இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோரை  உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



இரண்டாவது அமர்வு உபவேந்தரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உபவேந்தர், பீடாதிபதிகள், நூலகர், பதில் பதிவாளர், பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர், தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர்  உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு  இரு நாடுகளுக்குமிடையேயான பரிமாற்றங்கள், கல்விப் பங்காண்மைகள் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு புதிய சகாப்தத்திற்குள் ஆணைக்குழு பிரவேசித்து செயட்ப்படுகின்றது .

எல்லைகளுக்கு அப்பால் சென்று அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்விச் சூழலை மேம்படுத்தும் துடிப்பான அறிவுப் பரிமாற்றங்கள் ஊடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் மக்களுக்கிடையிலான, கல்வி மற்றும் அறிவியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் ஆணைக்குழு ஒரு முக்கிய பங்கை வகித்து செயட்ப்படுகின்றது.

“ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டம் 71 ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை கட்டமைத்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. 2000 இற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பயணம் செய்து; நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர்.  

உயிரியல், மருத்துவ ஆராய்ச்சி முதல் ஆங்கில மொழி கற்பித்தலின் காலனித்துவ நீக்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு ஆய்விற்கு உதவி செய்வது வரை, புல்பிரைட் மானியம் பெறுபவர்கள் வகுப்பறைக்கு அப்பாலும் நீடிக்கும் வாழ்நாள் உறவுகளை உருவாக்குகின்ற, பலரது வாழ்க்கையினை மாற்றியமைக்கின்ற கல்விப் பணிகளை மேற்கொள்கின்றனர். 

அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு: 1952ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. 

வரி செலுத்தும் அமெரிக்கக் குடிமக்களால் நிதியளிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவானது கல்வி, கலாச்சார மற்றும் தொழில்வாண்மைப் பரிமாற்றங்கள் ஊடாக பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் ஒரு தன்னாட்சியுடைய, இரு-தேசிய, அரசு சாரா அமைப்பாகும். பல்கலைக்கழகங்கள், வணிக, அரச, அரச சார்பற்ற மற்றும் கலை நிறுவனங்கள் ஆகியவற்றின் உயர் மட்டங்களில் பணியாற்றும் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் 2,000இற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். 

மேலும் அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியினைத் தொடர்வதற்கு ஊக்குவிக்கும் EducationUSA அமைப்பினையும் ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்பார்வை செய்கிறது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயலமர்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரின்  வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர்  எம்.ஏ.சி. சல்பியா உம்மா மற்றும் தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம். இர்ஷாட் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று 2024.02.21 ஆம் திகதி இரு அமர்வுகளாக செயலமர்வுகள் இடம்பெற்றது.குறித்த அமர்வுகளில் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்துகொண்டு செயலமர்வின் நோக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.முதலாவது அமர்வு பல்கலைக்கழக கல்விசார் அணியினர்  மற்றும் உயர்கல்வியை தொடரவிரும்பும் இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோரை  உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இரண்டாவது அமர்வு உபவேந்தரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உபவேந்தர், பீடாதிபதிகள், நூலகர், பதில் பதிவாளர், பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர், தொழில் வழிகாட்டல் நிலையத்தின் பணிப்பாளர்  உள்ளிட்டவர்களுடன் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு  இரு நாடுகளுக்குமிடையேயான பரிமாற்றங்கள், கல்விப் பங்காண்மைகள் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றை வளர்க்கும் ஒரு புதிய சகாப்தத்திற்குள் ஆணைக்குழு பிரவேசித்து செயட்ப்படுகின்றது .எல்லைகளுக்கு அப்பால் சென்று அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்விச் சூழலை மேம்படுத்தும் துடிப்பான அறிவுப் பரிமாற்றங்கள் ஊடாக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே காணப்படும் மக்களுக்கிடையிலான, கல்வி மற்றும் அறிவியல் உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் ஆணைக்குழு ஒரு முக்கிய பங்கை வகித்து செயட்ப்படுகின்றது.“ஃபுல்பிரைட் நிகழ்ச்சித்திட்டம் 71 ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை கட்டமைத்து இரு நாடுகளுக்கும் பயனளிக்கிறது. 2000 இற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பயணம் செய்து; நிகழ்ச்சித்திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர்.  உயிரியல், மருத்துவ ஆராய்ச்சி முதல் ஆங்கில மொழி கற்பித்தலின் காலனித்துவ நீக்கத்தை இலக்காகக் கொண்ட ஒரு ஆய்விற்கு உதவி செய்வது வரை, புல்பிரைட் மானியம் பெறுபவர்கள் வகுப்பறைக்கு அப்பாலும் நீடிக்கும் வாழ்நாள் உறவுகளை உருவாக்குகின்ற, பலரது வாழ்க்கையினை மாற்றியமைக்கின்ற கல்விப் பணிகளை மேற்கொள்கின்றனர். அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு: 1952ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. வரி செலுத்தும் அமெரிக்கக் குடிமக்களால் நிதியளிக்கப்பட்ட இவ்வாணைக்குழுவானது கல்வி, கலாச்சார மற்றும் தொழில்வாண்மைப் பரிமாற்றங்கள் ஊடாக பரஸ்பர புரிதலை ஊக்குவிக்கும் ஒரு தன்னாட்சியுடைய, இரு-தேசிய, அரசு சாரா அமைப்பாகும். பல்கலைக்கழகங்கள், வணிக, அரச, அரச சார்பற்ற மற்றும் கலை நிறுவனங்கள் ஆகியவற்றின் உயர் மட்டங்களில் பணியாற்றும் அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் 2,000இற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். மேலும் அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியினைத் தொடர்வதற்கு ஊக்குவிக்கும் EducationUSA அமைப்பினையும் ஃபுல்பிரைட் ஆணைக்குழு மேற்பார்வை செய்கிறது.

Advertisement

Advertisement

Advertisement