• Aug 26 2025

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றத்தில்!

Chithra / Aug 26th 2025, 8:41 am
image

அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இன்று (26) வரை விளக்கமறியலில் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகள் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 22 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றத்தில் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.இன்று (26) வரை விளக்கமறியலில் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சினைகள் காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் பரிந்துரையின் பேரில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.ரணில் விக்ரமசிங்க, ஆகஸ்ட் 22 அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement